அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு அதீத பயம் ஏற்பட்டதால் தொகுதி மாறியுள்ளார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

வயநாடு தொகுதியில் தோற்றுவிடுவோம் என தெரிந்ததால் புதிய தொகுதியில் போட்டியிடுகிறார். சோனியா காந்தி தேர்தலில் போட்டியிட பயந்து மாநிலங்களவை எம்.பி. ஆகியுள்ளார் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்.பி. ப்ரிஜ்பூஷனின் மகன் கரன் பூஷனுக்கு பாஜக சார்பில் சீட் வழங்கியது குறித்து மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் X தளத்தில் பதிவு

“நாங்கள் அனைவரும் எங்கள் தொழிலை பணயம் வைத்து, வெயிலிலும் மழையிலும் பல நாட்கள் தெருக்களில் தூங்கினோம். இன்று வரை ப்ரிஜ் பூஷன் கைது செய்யப்படவில்லை. நாங்கள் எதையும் கோரவில்லை. நீதியை மட்டுமே கோருகிறோம். கைது செய்வதை விடுங்கள், இன்று ப்ரிஜ் பூஷனின் மகனுக்கு சீட் கொடுத்து நாட்டின் கோடிக்கணக்கான மகள்களின் மன உறுதியை உடைத்துள்ளீர்கள்” – சாக்ஷி மாலிக்
வெற்றி கைநழுவி விட்டது பிரதமர் மோடிக்கு தெரியும்: ராகுல்

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கான வெற்றி கைநழுவி போய்விட்டதை பிரதமர் நரேந்திர மோடி நன்கு அறிந்துள்ளார். இது அவரது பேச்சிலிருந்து உணர முடிகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் பா.ஜனதா வெற்றி பெறும்-அண்ணாமலை பேச்சு

நான் சென்ற இடமெல்லாம், மத்தியில் மீண்டும் நிலையான, வலிமையான ஆட்சி அமைவதில் மக்கள் உறுதியாக உள்ளனர். தமிழகத்தில் இந்த முறை மும்முனை போட்டி நடந்தது. இதில், தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் பா.ஜனதா வெற்றி பெறும்”இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுலுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக பிரதமர் மோடி பேசியதாக காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தி பேசியதாக பா.ஜனதாவும் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தன. இந்த புகார் தொடர்பாக 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கமளிக்க பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தலைவர்களின் பேச்சு கடுமையான விளைவுகளை […]
வட இந்தியாவில் பா.ஜ.க வுக்கு 100 சீட் கிடைப்பதே அரிது திமுக பகீர் தகவல்

வட மாநிலங்களில் மோடி தலைமையிளான பாஜக கூட்டணிக்கு அதரவு சரிந்துள்ளது. 100 தொகுதியை பிடிப்பது கடினம் நெல்லிக்குப்பம் புகழேந்தி தாம்பரம் அருகே செம்பாக்கத்தில் திருப்பெரும்புதூர் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் பேச்சு:- ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் டி ஆர் பாலு அவர்களை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் செம்பாக்கம் தெற்கு பகுதி சார்பாக பகுதிகழக செயலாளர் இரா.சுரேஷ் ஏற்பாட்டில், பகுதி கழக அவைத்தலைவர் க.ராமச்சந்திரன் தலைமையில் செம்பாக்கம் பேரூந்து நிலையம் அருகே நடைபெற்றது. இதில் தலைமை […]
தமிழக பாஜக மாநில செய்திதொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் அறிக்கை
தமிழகத்தில் மோடிஅலை-தோல்வி பயத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எதிராக தினமும் ஒரு பொய்யை கூறி வருகிறார். தனித்து போட்டியிட்டால் ஒரு தொகுதியில் கூட திமுகவுக்கு டெபாசிட் கிடைக்காது தமிழகத்தின் வளர்ச்சிக்கு வாஜ்பாய், மோடி ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பே காரணம் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராவது உறுதியான ஒன்று என்பதாலும், பிரதமர் மோடிக்கு தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆதரவாலும் தமிழக மக்கள் பாஜக […]
பழைய பல்லாவரத்தில் அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்தில் வெடித்த கோஷ்டி மோதல் கார் கண்ணாடி உடைப்பு

பழைய பல்லாவரத்தில் திருப்பெரும்புதூர் மக்களவை அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் பிரச்சாரத்தின்போது இரு கோஷ்டி மோதிகொண்டதால் பரபரப்பு. பிரச்சார வாகனம் முன்பக்க கண்ணாடி உடைப்பு. முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தன்சிங், அவரது மகன் அதிமுக பகுதி செயலாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் பிரச்சார வாகனத்தில் உடன் வந்தனர். அதிமுக நிர்வாகியான ராஜப்பா பெண்களை திரட்டி அங்குள்ள கோவில் வாளாகம் முன்பாக வரவேற்பு அளிக்க காத்து இருந்தார். அதற்கு முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அனுமதியளிக்கவில்லை. […]
தாம்பரம் ரயிலில் சிக்கிய 4 கோடி பாஜக வேட்பாளர் பணம் பறிமுதல்

நெல்லை விரைவு ரெயிலில் 3.99 கோடி கடத்திய மூன்று பேரை தாம்பரம் ரெயில் நிலையத்தில் பிடித்த போலீசார் தேர்தல் பறக்கும்படையினர் மூலம் விசாரணை, திருநெல்வேலி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் கடத்தி சென்றதா பிடிபட்டவர்கள் வாக்குமூலம் தாம்பரம் மாநகர காவல் துறைக்கு ரவுடிகள் ரெயிலில் பணம் கடத்துவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் விரைவு ரெயில் குளிர்சாதன பெட்டியில் சென்ற நபர்களை கண்காணித்தனர். இதனையடுத்து ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் […]
வடசென்னை தொகுதியில் ஜெயிக்க போவது யார்?

வட சென்னை தொகுதியில் தி.மு.க., பா.ஜ.க., அ.தி.மு.க., என மும்முனை போட்டி நடக்கிறது. இந்த மூன்று கட்சி வேட்பாளர்களும் பலம் வாய்ந்தவர்கள். இந்த மூவருக்கும் தேர்தல் களம் என்பது புதிதும் அல்ல. தற்போது கள ஆய்வில் வந்த தகவலின் படிஎவ்வளவுதான் பா.ஜ.க., வேட்பாளர் பால் கனகராஜ், அ.தி.மு.க., வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோர் எவ்வளவு போராடினாலும் தி.மு.க., வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் வெற்றி உறுதி என்றே தோன்றுகிறது என நேற்று பதிவு செய்யப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக […]