“10 ஆண்டு கால ஆட்சியில், உலகின் பணக்கார கட்சியாக பாஜக உருவெடுத்தது எப்படி?”

காங்கிரஸ் இந்தியாவில் 55 ஆண்டுக் காலம் ஆட்சியில் இருந்தும் பணக்கார கட்சியாக உருவெடுக்கவில்லை, ஆனால் 10 ஆண்டு கால ஆட்சியில், உலகின் பணக்கார கட்சியாக பாஜக உருவெடுத்தது எப்படி? கடந்த 2 ஆண்டுகளில், பாஜக ₹60,000 கோடியை பல்வேறு வகையில் செலவிட்டுள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி….
விரைவில் மக்களவை தேர்தல் முடிவுகள் முன்னோட்டம் விரைவில்
எந்தெந்த தொகுதிகளில் யார்? ? வெற்றி பெறுகிறார்கள் என்ற தகவல்கள் முன்னோட்டமாக விரைவில் குழுவில் வெளிவர உள்ளது. திமுக கூட்டணி – 20, அதிமுக கூட்டணி -15,பாஜக கூட்டணி -5.
தோ்தலுக்கு பிறகு மோடியை அமலாக்கத் துறை விசாரிக்கும்: ராகுல் காந்தி

ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு (வாக்கு எண்ணிக்கை நாள்) பிரதமராக இருந்த மோடியிடம் அமலாக்கத் துறை ஊழல் தொடா்பாக விசாரணை நடத்தும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.
“ஜெயலலிதா இந்து மதம் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இந்துத்துவா தலைவர்”

“ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்பதை யாரும் மறுக்க முடியாது” “கரசேவையை காரணம்காட்டி பாஜக ஆட்சி கலைக்கப்பட்ட போது அதனை துணிச்சலாக கண்டித்தவர் ஜெயலலிதா” “ஜெயலலிதாவை பெரிய வட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புகிறோம்” “ஜெயலலிதாவை அதிமுகவினர்தான் குறுகிய வட்டத்தில் சுருக்க நினைக்கின்றனர்” “ஜெயலலிதா இருந்திருந்தால், நிச்சயம் அயோத்தி ராமர் கோயில் சென்றிருப்பார்” “பல ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் ஜெயலலிதா” “நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்பவர் ஜெயலலிதா” பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்
கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா

தனது 17 வயதுடைய மகளிடம் பாலியல் வன்கொடுமை யில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய பெண், நேற்றிரவு மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்
வாங்க, வந்து ஒரு வாய் சாப்பிட்டுப் போங்க” – தமிழக காங்கிரஸை கிண்டலடித்த பாஜக தலைவர் அண்ணாமலை!

பிரதமரை கண்டித்து தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும் , உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். மேலும், வரும் அனைவருக்கும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம். எப்படி திமுகவும் காங்கிரஸும் தமிழினத்துக்கே எதிரியாக விளங்குகின்றன என்ற காணொளியையும், அன்றைய […]
மேற்குவங்க மாநிலம் மிட்னாபூர் நகரில் நேற்று நடிகரும், பாஜ தலைவருமான மிதுன் சக்ரவர்த்தியின் பிரசார பேரணி மீது சிலரால் கற்கள் வீசப்பட்டன

அதைத் தொடர்ந்து அங்கு மோதல் வெடித்தது. மிட்னாபூர் மக்களவை தொகுதியில் மே 25ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜ வேட்பாளர் அக்னிமித்ரா பாலை ஆதரித்து நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது சாலையோரம் நின்று இருந்த சிலர் ஊர்வலத்தின் மீது கண்ணாடி பாட்டில்கள் மற்றும் கற்களை வீசியதாக கூறப்படுகிறது. அதனால் இருதரப்பினருக்கும் மோதல் வெடித்தது. போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஐந்து கட்ட மக்களவை தேர்தல் முடிந்துள்ள நிலையில் பாஜ 310 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்

ஒடிசா மாநிலம், சம்பல்பூரில் பாஜ வேட்பாளரை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் அமித் ஷா, இந்த முறை பாஜவின் சின்னமான தாமரையானது ஒடிசாவில் மலரும்.5கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் பாஜ 310 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. 6 மற்றும் 7 கட்ட தேர்தல் முடிந்த பின் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜ கைப்பற்றும். ஒடிசாவின் பெருமை, மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை […]
காங்கிரசை கண்டித்து குரோம்பேட்டையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்திய மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பாஜக சார்பில் இந்தியர்களை இழிவாக பேசிய காங்கிரஸ் கட்சியின் சாம் பிட்ரோடாவை கண்டித்து மாவட்டத் தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தலைமையில் குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் சாம் பிட்ரோடாவை கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் […]
தென்னிந்தியவின் முதல் பா.ஜ.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வேலாயுதன் (73) இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்

அன்னாரின் இறுதி சடங்குகள் நாளை (09.05.2024 வியாழக்கிழமை )காலை 10.30 மணியளவில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கீழகருப்புக் கோட்டில் அன்னாரது இல்லத்தில் நடைபெறுகிறது.