ஆறுதல் கூற பாஜக தலைவர் அண்ணாமலையும் கள்ளக்குறிச்சி செல்லவுள்ளதாக தகவல்
திருச்சி சூர்யா நீக்கம் – பாஜக அதிரடி

பாஜகவில் இருந்து திருச்சி சூர்யா மீண்டும் நீக்கம் இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்- பாஜக கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக, 2வது முறையாக தமிழக பாஜக அதிரடி முடிவு.
பாஜக சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன், பாஜக பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் ஓராண்டு காலம் நீக்கம்

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, மாநிலத் தலைமையை தொடர்ந்து விமர்சனங்கள் செய்து வந்ததால் அதிரடி நடவடிக்கை.
கருணையும் ஈகையும் வலியுறுத்தும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்;

தியாகத் திருநாளாம் பக்ரீத் நன்னாளில், அனைவரிடையே அமைதியும், மனித நேயமும் நிலவவும், சமத்துவமும், சகோதரத்துவமும் மலரவும், எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” -பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை
ஒடிசா மாநிலத்தில் முதல்வராக பாஜக எம்எல்ஏ மோகன் சரண் மாஜி இன்று பதவியேற்பு

இன்று மாலை 5 மணிக்கு ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி ஒடிசா முதல்வராக பொறுப்பேற்கிறார். ஒடிசாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதாதளம் கட்சியை பாஜக வீழ்த்தியது. மோகன் சரண் மாஜியின் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
அண்ணாமலையின் கடின உழைப்பே பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரிக்க காரணம்

“அண்ணாமலை 24 மணி நேரமும் பாஜக வளர்ச்சிக்காக உழைத்தார்”
2014ல் பாஜக : 282 காங் : 44பிரதான எதிர்க்கட்சி கிடையாது
2019ல் பாஜக : 303 காங் : 55பிரதான எதிர்கட்சி கிடையாது. கடந்த 10 வருடங்களில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி அந்தஸ்திற்கு தேவையான இடங்களில் எந்த கட்சியும் வெற்றி பெறவில்லை. எதிர்க்கட்சித் தலைவரே இல்லாமல் பாராளுமன்றத்தில் இஷ்டம் போல் ஆடியது. எந்த அளவுக்கு என்றால் சுதந்திர இந்தியாவில் 144 MPகளை தகுதி நீக்கம் செய்து எந்த எதிர்ப்பும் இல்லாமல் சட்டங்களை நிறைவேற்றியது. துணை சபாநாயகர் இல்லாமல் 5 ஆண்டுகள் கடத்தியது என்று தன் விருப்பத்திற்கு ஆட்சி செய்தார்கள் ஆனால் […]
பாஜக, தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு சட்டமன்ற தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை

தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதிகளின் ஓட்டு விவரங்களை தற்போது… 234 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பகுத்து வெளிவந்துள்ள செய்தி நம்மை பல ஆச்சரியங்களில் ஆழ்த்துகின்றது. ஒவ்வொரு மக்களவை தொகுதிக்குள்ளும்… 6 சட்டமன்ற தொகுதிகள் இருப்பதை நாம் அறிவோம். அவை ஒவ்வொன்றிலும் தொகுதி வாரியாக எந்த கட்சி முன்னிலை பெற்றுள்ளனர் என்பதை இனி பார்ப்போம். மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில்…221 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி முதலிடம் பிடித்துள்ளது. வாவ்..! பாராட்டுகள் & வாழ்த்துகள். மீதி… 13 சட்டமன்ற […]
மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்த எனது கணிப்பு தவறாகிவிட்டது: பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்

மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்த எனது கணிப்பு தவறாகிவிட்டது. பாஜகவுக்கு 300 சீட்கள் வரை கிடைக்கும் என நாங்கள் கணித்தோம். ஒரு தேர்தல் வியூக நிபுணராக நான் எண்ணிக்கை குறித்து பேசியிருக்கக் கூடாது. இனி எண்ணிக்கை குறித்து நான் பேசப் போவதில்லை என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சி அதிகாரப்பூர்வ தகவல்

6 அமைச்சரவை இடங்களுக்கான கோரிக்கையை, பாஜக தலைமைக்கு அனுப்பியுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி அதிகாரப்பூர்வ தகவல் நீர்வளம், சாலைப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, நிதித்துறை, சுகாதாரம், கல்வி அமைச்சகம் தெலுங்கு தேசம் தரப்பில் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்