ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பா.ஜ.க. ஒன்றிய அரசுக்கு கண்டனம்

வருகிற ஜூலை 27, சனிக்கிழமை, காலை 10.00 மணியளவில், மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

“பாஜக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் அளித்த பல வாக்குறுதிகள், இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்பது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது

வட மாநிலங்களையும், பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையோடு ஊக்குவிக்கும் அறிக்கையாக இல்லை தமிழ்நாட்டின் மீது பாஜக அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே இது காட்டுகிறது”

நயினார் நாகேந்திரன் ஆஜர்

நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில், தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் ஆஜர்

“பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி, இதை திட்டமிட்ட மற்றும் நடைமுறை படுத்தியவர்களையும் கைது செய்ய வேண்டும்;

தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க சில கட்சிகள் முயற்சி செய்து வருகின்றனர், அதில் பாஜகவிற்கு முக்கிய பங்கு உண்டு” -சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பேட்டி

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறுகையில்

“தமிழகத்தில் சமீபகாலமாக 17 சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழக பாஜக மூத்த தலைவர்கள் டெல்லியில் தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் மற்றும் அதிகாரிகளை சந்திக்க உள்ளனர். தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவருக்கு நீதி கிடைக்க வேண்டும். மறைந்த கே. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரிக்குமாறு மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டுக்கொள்கிறோம்

2029 லும் காங்கிரஸ் கட்சிக்கு எதிர் கட்சி வரிசை தான்.!

காங்கிரசுக்கு இனி எப்போதுமே எதிர் கட்சி வரிசைதான்.! காங்கிரஸ் கட்சி விவாதிக்க முடியாத போது எல்லாம் கூச்சலிட்டு கொண்டே இருப்பார்கள்! 3 தேர்தல் கடந்த போதும்…காங்கிரஸ் கட்சி 100 இடங்களை கூட பிடிக்க முடியவில்லை.! தோற்பதில் உலக சாதனை படைத்துள்ளது காங்கிரஸ்.! பிரதமர் மோடி.!

167 கோடி ரூபாய் மதிப்பள்ள 267 கிலோ தங்கக் கடத்தல் வழக்கின் விசாரணை வளையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை?

ஜூன் 29ம் தேதி சென்னை விமான நிலையத்தில் உள்ள பொம்மை விற்கும் ‘AirHub’ என்ற கடையில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த கடையின் பணியாளர் ஒருவர் உடலில் மறைத்து வைத்திருந்த 1 கிலோ தங்க பேஸ்ட்டை அதிகாரிகள் கைப்பற்றினர் மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த கடையின் உரிமையாளர் யூடியூபர் சபீர் அலியை தங்க கடத்தில் தொடர்பு இருந்ததை அறிந்து அவருடன் சேர்த்து 9 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.யூடியூபர் சபீர் […]

பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு திடீர் உடல் நலக்குறைவு: எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

எல்.கே.அத்வானிக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.புதுடெல்லி, இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், பா.ஜனதா மூத்த தலைவருமான எல்.கே. அத்வானி, நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனை அறிக்கை ஒன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 96 வயதான பா.ஜனதா மூத்த தலைவரான எல்.கே.அத்வானிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக துறையை சேர்ந்த டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை […]