திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு

திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதற்கான ஆவணங்களை டிரங்க பெட்டி ஒன்றில் DMK files 2 என்ற பெயரில் தமிழ்நாடு கவர்னர் ஆர் என் ரவியிடம் ஒப்படைத்த தமிழ்நாடு பாஜக

மணிப்பூர் கலவரத்தில் 2 மாதமாக சிகிச்சையில் இருக்கும் குக்கி பழங்குடி பாஜக எம்எல்ஏ!

மணிப்பூர் வன்முறையில் குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த அப்பாவிப் பொதுமக்கள் மட்டுமின்றி, அந்த சமூகத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ-க்களும் தாக்குதலுக்கு உள்ளாகினர். இவ்வாறு இனவெறி தாக்குதலுக்கு உள்ளான பாஜக எம்எல்ஏ-க்களில் ஒருவர் 2 மாதங்களாக மருத்துவமனையில் படுத்தபடுக்கையாக இருப்பது தெரியவந்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பாஜக சார்பில் 3 முறை சட்டமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர் வங்குசாஜின் வால்டே. 61 வயதான இவரால் தற்போது எந்த துணையும் இன்றி அசைய கூட முடியாது. குரலை இழந்து பேசவும் முடியாமல் மருத்துவமனையில் […]

தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து ஆகஸ்ட் 5ஆம் தேதி பாஜக போராட்டம்

திமுக அரசை கண்டித்து செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்டம் முழுவதும் பஞ்சாயத்து, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மாநகராட்சி என மொத்தம் 199 இடங்களில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் செம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட பாஜக தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேத […]

நெல்லையில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் மகன் ஸ்ரீநயினார் பாலாஜி, மோசடியாகப் பதியப்பட்ட ₹100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து!

ஸ்ரீநயினார் பாலாஜி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்த நிலையில், மண்டல துணை பத்திரப்பதிவு துறைத் தலைவர் அதிரடி நடவடிக்கை!

பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில்VOTE For INDIA என்று கூறி மக்களிடம் வாக்கு கேட்டதை சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பும் காங்கிரஸ் கட்சியினர்

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இன்று INDIA என பெயர் வைத்த நிலையில் அதனை பாஜக தலைவர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது

செங்கல்பட்டு மாவட்டத்தில் 199 இடங்களில் பாஜக ஆர்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜ சார்பில் வரும் 23ம் தேதி 199 இடங்களில் ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் தகவல் தாம்பரம், மேகதாது அணை பிரச்னை தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் தலைமையில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் கறுப்பு சட்டை அணிந்தபடி சேலையூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது மாவட்ட […]

திமுகவினரை கிண்டலடித்த அண்ணாமலை

திமுக அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, ராஜகண்ணப்பன், உதயநிதி என பலர் கருப்பு பணம் வைத்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர், “இந்தியாவில் கருப்பு பணம் பதுக்கியவர்களில் அதிகமானோர் திமுகவினர்தான், இதுகுறித்து நடவடிக்கை எடுத்தால் நெஞ்சுவலி என அவர்கள் மருத்துவமனையில் படுத்துக் கொள்வர்” என கிண்டலடித்துள்ளார்.

நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே முகவரியில் எப்படி இயங்குகிறது? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தினமும் ரூ.15 லட்சம்… ரூ.15 லட்சம் என்று சொல்லாத ஒன்றை சொல்லி புலம்பி வருவதாக அறிகிறேன். ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில், ரூ.30 ஆயிரம் கோடி கொள்ளை அடித்த பெருமை வாய்ந்த திமுகவின் வாரிசுக்கு ஒரு கேள்வி. இந்த கேள்விக்கு அவர் சிரித்து மழுப்பாமல் பதில் சொல்ல வேண்டும். ரூ.1000 கோடி ஊழலுக்கு பேர் போன, துபாய் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் குழும நிறுவனமான, நோபல் ப்ரிக்ஸ் […]

கொட்டும் மழையில் நின்று பேசிய அண்ணாமலை

மயிலாடுதுறையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, “மயிலாடுதுறை மண்ணின் பெருமையை செங்கோல் மூலமாக பிரதமர் இந்தியா முழுவதும் எடுத்துச் சென்றுள்ளார். வரும் பொதுத்தேர்தலில் பாஜக வென்றுவிட்டால், 2026 தேர்தலில் தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சி அமைக்கும்” என மழையில் நனைந்தபடி பேசினார்.