ரூ.10 லட்சம் மதிப்பிலான 1,250 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்களை கடத்தி வந்த செங்கோட்டை நகராட்சி பாஜக கவுன்சிலர் செண்பகராஜன் உள்பட மூவர் கைது.

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய மறுப்பு – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

திமுக எம்.பி., கனிமொழி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் உத்தரவு

வாட்ஸ் அப் கால் மூலம் வந்த பெண்ணால் அதிர்ச்சி; புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதனுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதனுக்கு வாட்ஸ் அப் கால் மூலம் வந்த பெண்ணால் அதிர்ச்சி இணைப்பை துண்டித்த சில நிமிடங்களில், வீடியோ காலின் ஸ்கிரீன் ஷாட்டை அவருக்கு அனுப்பி, பணம் தரவில்லை என்றால் ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவேன் என மிரட்டல்! சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராஜஸ்தானில் இருந்து அழைப்பு வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்!

தி.மு.க., இனி தப்பிக்கவே முடியாது!

–  அண்ணாமலை. தமிழக பாஜக தலைவர். பாதயாத்திரையாக, 21 நாட்களை வெற்றிகரமாக முடித்து, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதிகளுக்கு சென்றேன். மாநாட்டிற்கு இணையாக திரண்ட மக்கள் கூட்டத்தின் அன்பு பெருக்கிலே, முற்றிலுமாக கரைந்து போனேன். வீரத்தின் விளை நிலமாம், நெல்லை மண்ணுக்கு, எப்போது வந்தாலும் உற்சாகம் உடைப்பெடுக்கும். கடந்தாண்டு ஜூன் 5ல், நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தில், பிரதமர் மோடியின், 8ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசியதை மறக்க முடியாது. சுதந்திர போராட்டத்தின் போது, திருநெல்வேலி கலெக்டராக இருந்த […]

பாஜக ஆட்சிக்கு வந்த பின் மீனவர்கள் மீது 48 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது;

9 ஆண்டுகளில் 619 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு பாஜக அரசே பொறுப்பு”

326 இடங்களுடன் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு

புதிய கருத்து கணிப்பில் பரபரப்பு தகவல்கள் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு அடுத்த ஆண்டு (2024) மே மாதம் வரை பதவி காலம் உள்ளது. என்றாலும், பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று 3-வது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார். இதற்காக அவர் டெல்லியில் தொடர் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். இதற்கிடையே பா.ஜனதாவை வீழ்த்த […]

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷய மசோதா ஆகியவை மூலம் இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்க பாஜக அரசு மேற்கொண்டுள்ள இந்த துணிச்சலான முயற்சி, மொழி ஏகாதிபத்தியத்தின் கோரத்தாண்டவம் ஆகும். இது இந்திய ஒற்றுமையின் அடித்தளத்தையே அவமதிக்கும் செயல். இனி தமிழ் என்ற வார்த்தையை உச்சரிக்கக்கூட பிரதமர் மோடிக்கு உரிமை இல்லை. இந்தி மூலம் நமது அடையாளத்தை மாற்றும் முயற்சி எதிர்க்கப்படும்.