தமிழ்நாடு அரசின் நிர்வாகம் முடங்கி போய் உள்ளது

சட்ட மசோதாக்களின் நிலை குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உச்சநீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். தவறான மசோதாக்களை தமிழ்நாடு அரசு அனுப்புகிறது. அரசியலில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பது தான் என் நோக்கம்- மதுரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

வறுமையை ஒழித்து வருகிறது பாஜக – பிரதமர்

நாட்டில் வறுமையை பாஜக அரசு ஒழித்து வருகிறது; காங்கிரஸ் கட்சியிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏழைகளின் உரிமைகளை பறித்து பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்யும். நாடு, மாநில வளர்ச்சியைவிட காங்கிரஸ் கட்சிக்கு தன் சொந்த நலன் மட்டுமே முக்கியம் -மத்திய பிரதேசத்தில் பிரதமர் மோடி பேச்சு.

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஸ்ரீரங்கம் கோயிலின் முன்பாக வைக்கப்பட்டுள்ள “கடவுளை நம்புபவன் முட்டாள்” எனும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ள பலகை மற்றும் கம்பத்தை அகற்றுவதே முதல் கையெழுத்தாக இருக்கும் – அண்ணாமலை

இந்து சமய அறநிலையத் துறை எனும் துறையே பாஜக ஆட்சிக்கு வந்தால் இருக்காது. முகலாயர்களால் ஒழிக்க முடியாத சனாதன தர்மத்தை திமுகவால் மட்டும் எப்படி ஒழிக்க முடியும். திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ நடைபயண 100-வது தொகுதி நிகழ்வில் அண்ணாமலை பேச்சு.

முதல்வர் சந்திரசேகரராவை தேர்தலில் தோற்கடித்து தேசிய அளவில் அவரை வளரவிடாமல் தடுக்க காங்கிரஸ்,பாஜக கூட்டு சதி செய்துள்ளதாக தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ் குற்றம் சாட்டினார்

தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகனும், மாநில அமைச்சருமான கே.டி.ராமராவ் நேற்று அளித்த பேட்டியில்,‘‘30ம் தேதி நடக்கும் பேரவை தேர்தலில் பாஜக கட்சி போட்டியிலேயே கிடையாது. பிஆர்எஸ் கட்சி 88 இடங்களில் வெற்றி பெற்று தென் மாநிலங்களில் முதல் முறையாக மூன்றாவது முறை முதல்வர் ஆனவர் என்ற பெருமை சந்திரசேகரராவுக்கு கிடைக்கும். மக்களிடையே அரசுக்கு எதிரான அதிருப்தி தேர்தலில் ஓரளவு பிரதிபலிக்கலாம், அதை மறுக்க முடியாது.மெடிகட்டா அணையின் தூண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது என தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் […]

புதுக்கோட்டையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று மேற்கொள்ளவிருந்த “என் மண், என் மக்கள்” நடைபயண வழித்தடம் மாற்றம்

ஏற்கனவே அறிவித்த வழித்தடத்தில் செல்ல, காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், பாஜக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை- புதிய வழித்தடத்தில் அனுமதி புதுக்கோட்டை மச்சுவாடியில் இருந்து, பிருந்தாவனம் வடக்கு ராஜவீதி, மேலராஜ வீதி வழியாக அண்ணா சிலை செல்ல காவல்துறை அனுமதி

போலிஸ் என்று கூறிக்கொண்டு, சென்னையில் அரசுப் பேருந்தை நிறுத்தி, பொது இடத்தில் பள்ளி மாணவர்களைத் தாக்கியதாக பாஜகவைச்சேர்ந்த திரைப்பட நடிகை ரஞ்சனா நாச்சியார் சர்ச்சையில் சிக்கியுள்ளார்

தனது மகள் மீது மாமனார், மாமியார் தாக்குதல் நடத்தியதாக கடந்தாண்டு மாங்காடு காவல்நிலையத்தில் ரஞ்சனா நாச்சியார் போக்சோ வழக்கு கொடுத்திருந்தார்.இப்போது அவரே பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை அடித்து தண்டித்த விவகாரம் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. சமூக ஆர்வத்தில் ஆளாளுக்கு சட்டத்தைக் கையில் எடுத்தால்..???சட்டம் எதற்கு? போலிஸ் எதற்கு?நீதிமன்றம் எதற்கு? நிர்வாகம் எதற்கு?என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இயக்குநர் பாலாவின் உடன்பிறந்த அண்ணன் மகளான நடிகை ரஞ்சனா நாச்சியார், ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’, ‘அண்ணாத்த’, ‘டைரி’, ‘நட்பே துணை’ […]

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது நெல்லை அம்பாசமுத்திரம் நீதிமன்றம்;

தென்காசியில் ‘என் மண் என் மக்கள்’ நடை பயணத்தின் போது போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமின் வழங்கியது நீதிமன்றம்