தமிழ்நாட்டில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி அடைய வேண்டும் என 2 நாட்களுக்கு முன்பே வாழ்த்துக்கள் சொன்னேன்;

என் மண் என் மக்கள் யாத்திரையில் நாங்கள் அறிந்துக் கொண்டது தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது; உலகின் பெரிய முதலீட்டாளர்கள் அனைவரும் இந்தியாவை அதிக வருவாய் ஈட்டும் நாடாக பார்க்கிறார்கள் என பிரதமர் மோடி கூறி இருந்தார்”

கிறிஸ்தவ தேவாலயத்தில் அண்ணாமலைக்கு கடும் எதிர்ப்பு

தருமபுரியில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கிறிஸ்தவ தேவாலயத்தில் அன்னையின் உருவ சிலைக்கு மாலை அணிவிக்க அப்பகுதி இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜஸ்தானில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமைச்சர் சுரேந்திரபால்சிங் படுதோல்வி அடைந்தார்

காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத்சிங் அபார வெற்றி பெற்றார். 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் மபி, ராஜஸ்தான், சட்டீஸ்கரில் பா.ஜவும், தெலங்கானாவில் காங்கிரசும், மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சியை கைப்பற்றின. ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதியில் கடந்த நவம்பர் 25ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் 115 இடங்களில் பா.ஜ வெற்றி பெற்று காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.பஜன்லால் சர்மா கடந்த டிச.15ம் தேதி புதிய முதல்வராக பதவி ஏற்றார். கரண்பூர் […]

சமீபத்தில் தேர்தல் முடிந்து பாஜக ஆட்சி அமைத்த ராஜஸ்தான் மாநிலத்தில் கரன்பூர் சட்ட மன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது

இதில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை எம்எல்ஏ ஆவதற்கு முன்பாகவே அமைச்சராகியது ராஜஸ்தான் அரசு. இதில் பாஜக அமைச்சர் வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. இதற்கான முடிவு இன்று வெளியானது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் 12750 வாக்கு வித்தியாசத்தில் பாஜக அமைச்சரை தோற்கடித்துள்ளார் இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது..

அதிமுக – பாஜக கூட்டணி இல்லை

வரும் சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் – ஈபிஎஸ்

தாம்பரம் ரயில் நிலையம் விமான நிலையம் போல் மாறும் பா.ஜ. க தகவல்

ஆறு மாதத்திற்குள் ரயில் நிலையங்கள் புது ஒளிவு பெறும், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக தலைவர் தகவல் ரயில் நிலையங்களை மேம்படுத்த மத்திய அரசு சார்பில் ரயில் நிலைய மேம்பாட்டு குழு ஒன்றை உருவாக்கி அதில் உறுப்பினர்களை நியமித்து உள்ளது.இதில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக சார்பில் ரயில் நிலைய மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் அகரம்தென் பிரதான சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினர்களாக தென்னக ரயில்வே பயணிகள் ஆலோசனை […]

பசிப்பிணி போக்கிய மாமனிதர் விஜயகாந்த்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம்

பசிப்பிணி போக்கிய மாமனிதர் விஜயகாந்த் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் செய்துள்ளார். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர். தன்னலமற்ற தலைவர்; தமிழ்மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர்; கொடுத்துச் சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் என்று தெரிவித்தார்.