மாங்கனி’க்காக ‘தோட்டத்தை’ வட்டமிடும் அதிமுக… அதிகாரத்துக்காக பாஜகவை துரத்தும் அன்புமணி!

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், கூட்டணி அமைத்துதான் தேர்தலைச் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பாஜகவுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தையை அன்புமணி ராமதாஸ் நடத்தி வருகிறார். அதேவேளையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமதாஸை சந்தித்திருக்கிறார். பாமகவின் திட்டம்தான் என்ன? பொதுக்குழு கூட்டத்திலேயே பாமக 12 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்தத் தொகுதிகளில் பூத் கமிட்டிகள் பாமக சார்பாக அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் சொல்லப்பட்டது. […]
தமிழக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் 15 பேர் 7.2.2024 காலை புதுடில்லியில் பா.ஜ.க தேசியத் தலைவர் முன்னிலையில்(அ.இ.அ.தி.மு.க. விலிருந்து 14 பேரும் இந்தியதேசிய காங்கிரஸிலிருந்து ஒருவரும்) பா.ஜ.க வில் இணைகிறார்கள்
இன்னும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் விரைவில் மோதி தலைமையேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் மார்ச் இறுதிக்குள் பா.ஜ.க வில் இணைவார்கள்.
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது!

பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானிக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட இருப்பதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தள்ளார். மேலும், அத்வானியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் பா.ஜ.க.வின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு நான் தடையாக இருப்பதால் என்.ஐ.ஏ. சோதனை
தேர்தல் சமயத்தில் என்னையும் கட்சியையும் முடக்க பா.ஜ.க. திட்டமிட்டிருக்கிறது – சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு பிப்.5ல் என்.ஐ.ஏ. விசாரணைக்கு கட்சியினருடன் ஆஜராகப் போவதாக சீமான் அறிவிப்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் தன்னிடம் தான் விசாரணை செய்திருக்க வேண்டும் எனவும் சீமான் கருத்து விடுதலை புலிகள் அமைப்பு எங்கு இருக்கிறது? – அவர்களுக்கு நாங்கள் எப்படி பணம் வசூலிக்க முடியும்? என்றும் சீமான் கேள்வி என்.ஐ.ஏ. சோதனை – நேரில் ஆஜராக சீமான் முடிவு
பா.ஜ.க. பெண் நிர்வாகி ஒருவரின் மண்டையை உடைத்ததாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அமர்பிரசாத் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
தலைமறைவாகியுள்ள தமிழக பா.ஜ.க நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை கைது செய்ய தனிப்படை போலீசார் குஜராத் விரைந்துள்ளனர்
பாஜக வெற்றி பெறக் கூடாது. முஸ்லிம் லீக் உறுதி

இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சி சார்பில் மண்டல பயிலரங்கம் தாம்பரத்தில் அதன் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கலந்துக்கொண்டனர். பேசிய காதர்மொகிதீன்:- குரானிலும் நபிகள் சொன்னதுபோல் திராவிட மாடல் ஆட்சிக்கு பொருத்தமான உள்ளது. இது தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் நல்லாட்சி வரவேண்டும் என விரும்பிதான் தமிழகத்தில் திமுக தலைமையில் இந்தியா கூட்டணியில் உள்ளோம் எனவே ஜெய் […]
தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற்றால் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறப்போம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேச்சு
ராகுல் வாகனம் மீது தாக்குதல்: கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த காங். வலியுறுத்தல்!

அசாமில் இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தின் போது ராகுல் காந்தியை தடுத்ததாக அம்மாநில பாஜகவிற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்! அசாமில் இந்திய நீதிப் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று ராகுல்காந்தி அங்குள்ள கோயிலுக்கு சென்றபோது உள்ளே அனுமதிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு ராகுல்காந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக பொம்மிடி காவல் துறையினர் வழக்குப்பதிவு கடந்த 8ம் தேதி பொம்மிடி அடுத்த பி.பள்ளிபட்டியில் தேவாலயத்துக்கு சென்ற அண்ணாமலைக்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. பொம்மிடி காவல் நிலையத்தில் கார்த்திக் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை மீது 3 பிரிவின் கீழ் வழக்கு