காங்கிரஸுக்கு இது தான் கடைசி தேர்தல் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

உத்திரபிரதேசத்தில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை; 45 வருடங்களுக்கு முன் இவரது தந்தையும் இதேபோல் கொலை திமுக, காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு அடுத்தகட்ட பேச்சுவார்த்தை 10ம் தேதி என தகவல்

கடவுள் ராமரை ஆ.ராசா அவமதித்துவிட்டதாக பாஜகவினர் பரப்புவது பொய்… ஆ.ராசா பேசியதை முழுதாக கேட்டால் “இந்துக்களின் விரோதி பாஜகவினர்” என நீங்கள் உணர்வீர்கள்

“ஜெய் ஸ்ரீராம் சொல்லிவிட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை குஜராத் பாஜக அரசு விடுவித்தது. குற்றவாளிகள் விடுதலையானபோது “ஜெய் ஸ்ரீராம்” , “பாரத் மாதா கீ ஜே” என சொல்லி வரவேற்றார்கள். இது தான் ஜெய் ஸ்ரீராம் என்றால் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது” ஆ.ராசா பேசியதில் துளி கூட தவறில்லை. ஆ.ராசா பேசிய வீடியோவை சிறு துண்டாக வெட்டி அவதூறு பரப்பும் பாஜக ஆதரவாளர்களுக்கு வெட்கமே இல்லை.

பாஜக அணியில் அஇசமக

பாஜக கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி இணைந்துள்ளது.இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில் திருநெல்வேலி அல்லது தூத்துக்குடி தொகுதியில் ஆர்.சரத்குமார் அல்லது ராதிகா சரத்குமார் தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

100 முறை வந்தாலும் மோடி வெல்ல முடியாது

காலாவதியான எம்.எல்.ஏ களை கட்சியில் சேர்ந்துவிட்டு அண்ணமலை பகல் கனவு காண வேண்டாம். அதிமுக பலவீனமடைந்த நிலையில் 10 அல்ல 100 முறை தமிழகத்திற்கு மோடி வந்தாலும் கால்பதிக்கமுடியாது. வெள்ளத்தை சரியாக கையாண்டதாக மத்திய குழு தெரிவித்து சென்ற நிலையில் சல்லிகாசு கொடுக்காம குறையை மட்டும் மோடி சொல்கிறார் அப்துல்சமது பேச்சு:- சென்னையை அடுத்த பல்லாவரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் “வெல்லட்டும் இந்தியா” என்கிற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மமக பொதுச்செயலாளர், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் […]

ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிலையான சின்னம் இல்லாததால் தாமரைச் சின்னத்தில் போட்டியிட பாஜக நிர்பந்திப்பதாகவும், அதற்கு அவர் மறுப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இடம்பெறுவாரா? அவரை பாஜக கண்டுகொள்ளவில்லை என சொல்லப்படுகிறதே? ஆகிய கேள்விகளுக்கு பதில் அளிக்க அண்ணாமலை மறுப்பு.

வாழ்க்கை முழுவதையும் நாட்டிற்காக அர்ப்பணித்தவர் பிரதமர் மோடி: பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு

தனது குடும்பத்தை பார்க்க பிரதமர் மோடி தற்போது தமிழகத்திற்கு வந்துள்ளார் என்று பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை கூறியுள்ளார். 142 கோடி மக்கள் பிரதமர் மோடியின் குடும்பத்தில் உள்ளனர். தனது வாழ்க்கை முழுவதையும் நாட்டிற்காக அர்ப்பணித்த பிரதமருக்கு நாடே குடும்பம்தான் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்

“தமிழகத்தில் பாஜகவிற்கு ஆதரவு பெருகுவதால் சிலருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது!” – பிரதமர் நரேந்திர மோடி

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, வணக்கம் எனக் கூறி தனது உரையைத் தொடங்கினார். ஒவ்வொருமுறை சென்னை வரும்போது உற்சாகம் பிறக்கிறது. பாரம்பரியம் மற்றும் வணிகத்துக்கு மையப்புள்ளியாக சென்னை விளங்குகிறது. சென்னை நகரம் திறன் நிறைந்த இளைஞர்களால் நிரம்பியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் சென்னைக்கு முக்கியப் பங்கு உள்ளது. எனக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான உறவு மிகவும் பழமையானது. தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. நான் […]

“பாஜகவில் சேருவதாக பொய் தகவல் பரப்புகின்றனர்” – எஸ்.பி.வேலுமணி ஆவேசம்…

கோவை – அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவில் சேருவதாக பொய்தகவல் பரப்புகின்றனர்… வெறும் 3 முதல் 4 சதவீத வாக்காளர்கள் உள்ள பாஜகவில், அதிமுகவினர் சேருவார்களா என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி கூறினார்… முன்னாள் எம்எல்ஏ சிங்கை கோவிந்தராஜனின் 25-வது ஆண்டுநினைவு நாள் நிகழ்ச்சி சிங்காநல்லூரில் நேற்று நடைபெற்றது… இதில், எஸ்.பி.வேலுமணி பேசியதாவது… தற்போதைய அரசியல் சூழலில்சமூக வலைதளங்களில் பல்வேறுதகவல்கள் மற்றும் வதந்திகள் பரவுகின்றன… இதற்காக திமுக மற்றும் பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவை […]