பாஜக – பாமக கூட்டணி இடையே கூட்டணி ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு பாமக தலைவர் பேட்டி

தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்பட இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஆழமாக உள்ளது. எங்கள் கூட்டணி இந்தியாவிலேயே மிகப்பெரிய வெற்றி பெறும். மோடி 3 வது முறையாக இந்தியாவின் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் – அன்புமணி ராமதாஸ்
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு-அண்ணாமலை

10 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக பாமக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு. நாடாளுமன்றத் தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து பாமக எதிர்கொள்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி பெறும். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாற்று அரசியலை கொண்டுவர துடித்துக் கொண்டிருப்பவர். மக்களை நம்பி வலிமையான கூட்டணியை அமைத்துள்ளோம். தமிழகத்தின் அரசியல் நேற்றிரவில் இருந்து மாறியுள்ளது. ஒரே மேடையில் பிரதமர் […]
கோவையில் நேற்று மாலை பிரதமர் மோடி கலந்து கொண்ட ரோடு ஷோ நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில், பொதுமக்கள் கலைந்த பின்னர் சாலையில் இருந்த குப்பைகளை பாஜகவினரே அகற்றினர்
பாஜக கூட்டணி உத்தேச பட்டியல்
பாமக : அரக்கோணம்,தர்மபுரி,கடலூர்,கள்ளக்குறிச்சி,விழுப்புரம்,திருவண்ணாமலை,ஸ்ரீபெரும்புத்தூர், தமாகா : மயிலாடுதுறைஈரோடு ஓபிஎஸ் : சிவகங்கைதஞ்சாவூர் அமமுக : தேனிதிருச்சி Ex அஇசமக : விருதுநகர்தூத்துக்குடி புநீக : – வேலூர் இஜக : – பெரம்பலூர் தமமுக : – தென்காசி இகமமுக : – ராமநாதபுரம் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் : – மதுரை பாஜக : கன்னியாகுமரி,சிதம்பரம்,நாகப்பட்டினம்,சேலம்,நாமக்கல்,திருப்பூர்,ஈரோடு,நீலகிரி,கோயம்புத்தூர்,பொள்ளாச்சி,திண்டுக்கல்,கரூர்,கிருஷ்ணகிரி,ஆரணி,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,வடசென்னை,மத்திய சென்னை,தென்சென்னை,புதுச்சேரி. இதில் 40 தொகுதியிலும் தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக விரும்புகிறது. குறைந்தது 30 தொகுதிகளிலாவது தாமரைச் சின்னத்தில் […]
தமிழக மக்களை பாஜக நேசிக்கிறது, திமுக வஞ்சிக்கிறது: மோடி

தமிழக மக்களை பாஜக தான் நேசிக்கிறது. திமுக – காங்கிரஸ் கட்சிகள் வஞ்சிக்கின்றன. திமுக – காங்கிரஸ் இந்தியா கூட்டணியால், மக்களுக்கு வளர்ச்சித்திட்டங்களைக் கொடுக்க முடியாது. குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும். கொள்ளையடிப்பதை இலக்காகக் கொண்டது திமுக கூட்டணி என்று பிரதமர் மோடி கூறினார்.
கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடிக்கு பாஜகவில் தனது கட்சியான சாமகவை இணைத்த சரத்குமார் இருகரம் கூப்பி வரவேற்றார்
ஆடிட்டர் வீட்டில் பாமக மற்றும் பிஜேபி கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாம்
அன்புமணி மற்றும் அண்ணாமலை அவர்கள் முன்னிலையில் 9 நாடாளுமன்ற தொகுதிகளையும் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதியையும் ஒதுக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், அமமுக இணைந்தது
பாஜக உடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு வருகை

மூன்று மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்க த.மா.கா. வலியுறுத்துவதாக தகவல்
பாஜக கூட்டணியில் பாமக-வுக்கு 8 தொகுதிகளும், ஒரு மாநிலங்களை இடமும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்

பாமக உடனான பேச்சுவார்த்தையை முடித்த பிறகு தேமுதிகவை அணுக இருப்பதாகவும் பாஜக தரப்பு தகவல்.