பாஜகவில் இணைய வற்புறுத்தி தன்னிடம் பேரம் பேசப்படுவதாக டெல்லி அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு!

நான் பாஜகவில் இணையாவிட்டால் ஒரு மாதத்தில் கைது செய்யப்படக் கூடும் அடுத்த 2 மாதங்களில் தேர்தலின்போதே 4 ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை கைது செய்ய அமலாக்கத்துறை திட்டம்

வடசென்னை தொகுதியில் ஜெயிக்க போவது யார்?

வட சென்னை தொகுதியில் தி.மு.க., பா.ஜ.க., அ.தி.மு.க., என மும்முனை போட்டி நடக்கிறது. இந்த மூன்று கட்சி வேட்பாளர்களும் பலம் வாய்ந்தவர்கள். இந்த மூவருக்கும் தேர்தல் களம் என்பது புதிதும் அல்ல. தற்போது கள ஆய்வில் வந்த தகவலின் படிபா.ஜ.க., வேட்பாளர் பால் கனகராஜ், அ.தி.மு.க., வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோர் எவ்வளவு போராடினாலும் தி.மு.க., வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் வெற்றி உறுதி என்றே தோன்றுகிறது.

பாஜகவால் என்னுடைய குரலை ஒடுக்க முடியாது – ராகுல்காந்தி

காங்கிரசின் அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறையை வைத்து நாட்டை நடத்த முயற்சிக்கிறார்கள். ஈவிஎம் இல்லாமல் பாஜகவால் 180 இடங்களை கூட வெல்ல முடியாது – டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் ராகுல்காந்தி பேச்சு

கச்சத்தீவு – காங்கிரஸ் மீது பிரதமர் குற்றச்சாட்டு

கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி தாரைவார்த்தது என்ற உண்மை தற்போது வெளிவந்துள்ளது. கச்சத்தீவு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆர்டிஐ மூலம் பெற்ற தகவலை பகிர்ந்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு காங்கிரஸை நாம் ஒரு போதும் நம்ப முடியாது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்த காங்கிரஸ் கட்சி 75 ஆண்டுகளாக உழைத்து வருகிறது. – பிரதமர் மோடி

பாஜக கூட்டணியை எதிர்த்து பாமகவினர் விலகல்

பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் மத்திய ஒன்றிய பாமக நிர்வாகிகள் 50 பேர் கூண்டோடு ஆலந்தூரில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் திமுகவின் இனைந்தனர். பாஜகவுடம் பாமக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவதால் அதற்கு விரும்பம் இல்லாத காட்டாங்குளத்தூர் மத்திய ஒன்றிய பாமக செயலாளர் சத்தியா, ஒன்றிய பாமக துணைத் தலைவர் கார்திக், ஒன்றிய பாமக துணைச் செயலாளர் ஸ்ரீராம், ஒன்றிய பாமக இளைஞரணி துணை செயலாளர் சரவணன் உள்ளிட்ட 50 நிர்வாகிகள் கூண்டோடு திமுகவில் […]

“மோடி மீண்டும் ஜெயிக்கக்கூடாது,தோக்கணும்”

-மதுரையில் நடைபெற்ற தனது ஆதரவாளர் திருமண விழாவில் கலந்து கொண்ட பின் மக்களவைத் தேர்தல் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து

பாஜகவின் நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியல்

1) திருவள்ளூர் – பாலகணபதி 2) வட சென்னை – பால் கனகராஜ் 3) திருவண்ணாமலை – அஸ்வத்தாமன் 4) நாமக்கல் – கே.பி.ராமலிங்கம் 5) திருப்பூர் – முருகானந்தம் 6) பொள்ளாச்சி – வசந்தராஜன் 7) கரூர் – செந்தில்நாதன் 8) சிதம்பரம் – கார்த்தியாயினி 9) நாகை – எஸ்.ஜி.எம்.ரமேஷ் 10) தஞ்சை – எம்.முருகானந்தம் 11) சிவகங்கை – தேவநாதன் யாதவ் 12) மதுரை – ராம சீனிவாசன் 13) விருதுநகர் – […]

ஓ.பன்னீர்செல்வம் அணி லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை என தகவல்

39 தொகுதிகளுக்கும் பங்கீடு முடிந்துவிட்டதாக அண்ணாமலை அறிவிப்பு தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது பாஜக கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது பாஜக ஓபிஎஸ் அணிக்கு பாஜக சீட் ஒதுக்காத நிலையில் ஓபிஎஸ் விரைவில் அறிவிக்க உள்ளார்.

தமிழகத்தில் பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், பாஜக வேட்பாளர்களை உறுதி செய்ய டெல்லி செல்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர்

ஆலோசனைக்கு பின் 3 ஆம் கட்ட வேட்பாளர்கள் வெளியாகும் என தகவல்