தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து அமைச்சர் உதயநிதி வாழ்த்து பெற்றார். அமைச்சர் உதயநிதிக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
தனது 58வது பிறந்தநாளை ஒட்டி, வாழ்த்து தெரிவிக்க தனது வீட்டின் முன் இரவோடு இரவாக குவிந்த ரசிகர்களுக்கு, வீட்டில் இருந்தபடியே அன்பை பொழிந்த நடிகர் ஷாருக்கான்
முன்னாள் மேயர் சிவராஜ் 132-வது பிறந்த நாள்

தமிழ்நாடு அரசின் சார்பில், முன்னாள் மேயர் சிவராஜ் 132-வது பிறந்த நாளை முன்னிட்டு (29.09.2023) சென்னை தங்கசாலை, மணிக்கூண்டு அருகில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு […]
லயன் அழகப்பன் பேரனின் பிறந்த நாள்

தாம்பரம் சக்தி சாரதா பீடத்தில் லயன் அழகப்பன் பேரனின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.ஜெயபால் ஒருங்கிணைப்பாளர் கே.எம்.ஜே அசோக் செயலாளர் சதீஷ் குமார் மற்றும் உறுப்பினர்கள் காஞ்சி கணேசன், அழகப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாரிவேந்தர் எம்.பி பிறந்தநாள் விழா

எஸ்ஆர்எம் கல்வி குழுமங்களின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் எம்.பியின் பிறந்த நாள் விழா சேவை திருநாள் முப்பெரும் விழாவாக நடத்தப்பட்டது. விழாவில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பங்கேற்று விழா மலரினை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். விழாவை யொட்டி சிறப்பு பட்டிமன்றம், கவியரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. விழாவில் நல்லி குப்புசாமி செட்டியார், விஜிபி நிறுவன தலைவர் வி.ஜி.சந்தோசம், முன்னாள் மாநில தகவல் ஆணையர் பேராசிரியை சாரதா நம்பி ஆருரன், பட்டிமன்ற நடுவர், […]
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். “டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள், இந்த ஆண்டு உங்களுக்கு வெற்றி மற்றும் முன்னேற்றம் நிறைந்ததாக அமையட்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
குரோம்பேட்டை நாடார் சங்கத்தின் சார்பாக காமராஜரின் 121 வது பிறந்தநாள்

குரோம்பேட்டை நாடார் சங்கத்தின் சார்பாக காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராமஜெயம் மற்றும் சங்க நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை அணிவித்தனர். மேலும் ஜமீன் ராயப்பேட்டை அரசு பள்ளியில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசாக ஊக்கத்தொகை அளித்தனர். விழாவில் எஸ்.மதிவாணன், ஆர்.மோரீஸ், டி.எஸ்.முருகன், என்.எஸ்.பி.சங்கர், எஸ்.டி.சேகர், எஸ்.முருகேசன், வெற்றிவேல் மற்றும் சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
காமராஜரின் 121 வது பிறந்தநாள்

காமராஜரின் 121 வது பிறந்தநாளை முன்னிட்டு அஸ்தினாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் லயன் இ.ராஜமாணிக்கம் காமராஜரின் படத்திற்கு மாலை அணிவித்தபோது எடுத்தபடம். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காமராஜரின் பிறந்தநாள்

காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பல்லாவரம் காவல் நிலையம், ராதாநகரிலும் உள்ள சிலைக்கும் பி.தேவராஜன் (குட்டி), பிரஸ் பி.பழனி, கேசவராஜ் தலைமையில், ராஜாராம் மாலை அணிவித்து கொடியேற்றினார். எஸ்.மீனாட்சி சுந்தரம் இனிப்பு வழங்கினார். விழாவில் என்.நேத்தாஜி, ஆர்.ராமகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி ஜி.கே.சேகர், ஜி.செல்வகுமார் புருஷோத்தமன், பரசுராமன், முனியாண்டி, ராமசுப்பு பம்மல் ராம கிருஷ்ணன், ஜெயராமன், தனசுந்தரம், இப்ராஹிம், ராஜசேகர், சுப்பிரமணி கருணாகரன் சிவா, செல்வமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தியாகி சங்கரய்யாவின் 102 வது பிறந்தநாள்

குரோம்பேட்டை தியாகி சங்கரய்யாவின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் வி.சந்தானம் சந்தித்து ஆசி பெற்றபோது எடுத்தபடம்.