ஐபிஎல் பார்த்து விட்டு திரும்பிய2 மாணவர்கள் மெட்ரோ தூணில் பைக் மோதி பலி

ஐபிஎல் போட்டியை பார்த்து விட்டு அதிவேகமாக பைக்கில் சென்று மெட்ரோ தூணில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கால்வின் கென்னி, சித்தார்த்தன். இருவரும் நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியை கண்டு களித்துள்ளனர். பிறகு புல்லட் பைக்கில் வீட்டிற்கு திரும்பினர். பைக்கை கால்வின் கென்னி ஓட்டிச் சென்றார். அதிவேகமாக சென்றபோது ஆலந்தூர் மெட்ரோ ரயில் தூணில் கட்டுப்பாட்டை இழந்து மோதினர். […]

தடுப்புச் சுவரில் வாகனம் மோதல் மனைவி கண் முன்பே கணவர் பலி

தாம்பரம் அருகே சாலையோர தடுப்பு சுவற்றில் இருசக்கர வாகனம் மோதி விபத்தில் மனைவி கண் முன்னே கணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விஜயகுமார் (40) – குணசுந்தரி (32) தம்பதியினர்.இருவரும் இன்று அதிகாலை சுமார் ஒரு மணி அளவில் அவர்களது இருசக்கர வாகனத்தில் மின்டிலிருந்து, கடலூருக்கு மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக சென்றுள்ளனர். அப்போது தாம்பரம், இரும்புலியூர் பாலத்தின் மேல் அதிவேகமாக வந்தபோது கட்டுபட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையின் […]

சித்தாலப்பாக்கத்தில் மின்வாரிய அதிகாரி விபத்தில் உயிரிழப்பு

மடிப்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மின்வாரிய உதவி இயக்குனர் பலி சென்னையை அடுத்த மடிப்பாக்கம் கண்ணகி தெருவை சேர்ந்தவர் கோபால் இவரது மகன் செந்தில்குமார்(46). இவர் சித்தாலப்பாக்கம் மின்சார வாரிய உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். இன்று இரவு மேடவாக்கம்-பரங்கிமலை சாலையில் இருந்து மடிப்பாக்கம் சபரி சாலை வழியாக வீட்டிற்கு தனது இரு சக்கர வாகனத்தில்(TN 32 L 8427 HONDA SHINE ) சென்றுக் கொண்டு இருந்தார். அப்போது பின்புறம் […]

பல்லாவரம் அருகே வாகனம் மோதி காவலாளி பலி

பல்லாவரம் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது ஐ.டி ஊழியர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரி (62) துறைப்பாக்கதில் உள்ள தனியார் கட்டிட நிறுவனத்தில் செக்யூரிட்டி சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு உணவு அருந்துவதற்காக சாலையை கடக்க நின்ற போது வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் வாகனம் ஓட்டி வந்த இளைஞரும் […]

கல் குட்டையில் குளிக்க சென்றவர்கள் வாகனம் மரத்தில் மோதி இரண்டு பேர் பலி

தாம்பரம் அடுத்த சோமங்கலத்தை சேர்ந்தவர் விஜ்ய்26) இவருடன் கூலி வேலை செய்யும் ரமேஷ்(16) இருவரும் இன்று அங்குள்ள கல் குட்டையில் குளிக்க (பல்சர்-220) இருசக்கர வாகனத்தில் கிஷ்கிந் சாலையில் சென்றனர். அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் திடிரென கட்டுப்பாடை இழந்து சாலையோரம் உள்ள காப்புகாட்டில் புகுந்து மரத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஜய், ரமேஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்கிறார்கள்.