முடிச்சூர் பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலப்பு மோட்டார் சைக்கிள்கள் பாதிப்பு

தாம்பரம் அடுத்த முடிச்சூரில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் இயங்கி வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு அங்கு பெட்ரோல் நிரப்பி சென்ற இருசக்கர வாகனங்கள் அடுத்து அடுத்து பழுதாகி வழியிலேயே நின்று போக காரணம் என்ன என பார்த்தபோது பெட்ரோலுடன் அதிக அளவு தண்ணீர் கலந்துவிட்டது தெரிய வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டுனர்கள் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் […]

கண் சிகிச்சைக்கு சென்ற 72 வயது முதியவர் விபத்தில் பலி

மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி சாலையில் இருசக்கர வாகனம் மீது மற்றொரு இருசக்கரவானம் மோதியதில் கீழே விழுந்த பல்லாவரத்தை சேர்ந்த 72 வயது முதியவர் தாமோதரன்(75) உயிரிழப்பு, கண் பரிசோதனை செய்திட பேரன் கரணின் இருசக்கர வாகனத்தில் சென்னை நோக்கி இருசக்கரவாகனத்தில் பின்னார் அமர்ந்து சென்றபோது விபத்து ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்..

155 முறை போக்குவரத்து விதிகளை மீறிய இளைஞருக்கு ரூ.86,000 அபராதம்

கேரளாவில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது 155 முறை போக்குவரத்து விதிகளை மீறிய இளைஞருக்கு ரூ.86,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்க செயற்கை நுண்ணறவு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கண்ணூா் மாவட்டத்தின் மட்டூல் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் 2 பேரை ஏற்றிக் கொண்டு, ஹெல்மட் அணியாமல் சென்ற இளைஞா் ஒருவா் செயற்கை நுண்ணறிவு கேமராவில் பிடிபட்டுள்ளார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், பலதிடுக்கிடும் தகவல்கள் […]

படிப்புக்காக உணவு விநியோகம்: பல்லாவரம் மாணவர் விபத்தில் உயிரிழப்பு

பல்லாவரம் அடுத்த அனகாபுத்துரை சேர்ந்த கல்லூரி மாணவர் மகேஸ்வரன்(19), சேலையூர் பாரத் கல்லூரியில் மெக்கனிக்கல் இஞ்னியரிங் முதலாமாண்டு படித்து வந்தார். குடும்ப சூழல் காரணமாக பகுதி நேரமாக ஆன்லைன் ஆப் மூலம் உணவு விநியோகம் செய்தார். நேற்று இரவு 10.30 மணிக்கு இருசக்கர வாகனத்தில் குரோம்பேட்டை சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தூக்கிவிசப்பட்ட மகேஸ்வரன் தலையில் பலத்தகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு […]

கோவளம் அருகே கார் மோதி 3 பேர் பலி

சென்னை அடுத்த கோவளம் அருகே ஆந்திர பதிவெண் கொண்ட கார் கட்டுபாட்டை இழந்து முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியதில் கல்பாக்கம் அனுமின் நிலையத்தில் பணியாற்றும் சந்திரசேகர், அவர் மனைவி இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த அவர்களின் குழந்தை கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் உயிரிழப்பு. சந்திரசேகர் இருசக்கர வாகனத்தில் கேளம்பாக்கம் சென்றுவிட்டு கிழக்கு கடற்கரை சாலை கோவளம் அருகே செம்மஞ்சேரி எனும் பகுதியில் சென்றபோது ஆந்திரபதிவெண் கொண்ட கார் இருசக்கர வாகனத்தின் மீது […]

திருச்செந்தூரில் பிடிபட்ட பைக் திருடிய வாலிபர்

திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவை சேர்ந்த ஆழ்வார் மகன் அய்யப்பன் (38) என்பவர் நேற்று அவரது வீட்டின் முன்பு அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்துள்ளார். பின்னர் அந்த இருசக்கர வாகனம் திருடுபோயுள்ளது. இதுகுறித்து அய்யப்பன் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் திருச்செந்தூர் கோவில் வளாகத்தைச் சேர்ந்த வினோத் குமார் (20) என்பவர் அய்யப்பனின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து திருச்செந்தூர் கோவில் காவல் […]

இருசக்கர வாகனத்தில் தலைகீழாக நின்று ஓட்டி சாதனை

சென்னை அசோக்நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் உதயசந்திரன், இருசக்கர வாகனத்தில் பல்வேறு சாகச சாதனைகளை புரிந்த இவர் இருசக்கர வாகன இருக்கையில் தலைகிழாக நின்றவாறு இயக்கி சாதனை புரிய திட்டமிட்டு தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலையில் சாதனை முயற்சியில் ஒரு கி.மீ தூரம் இருகைகளால் இருசக்கர வாகனத்தை பிடித்தவாறு தலைகவசம் அணிந்த நிலையில் தலையை இருக்கையில் வைத்து கால்களை உயரமாக செங்குத்தாக தூக்கியவாறு ஓட்டிசென்றார். குறிப்பிட்ட இலக்கை அடைந்ததால் சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் உலக சாதனையாக […]

பள்ளி குழந்தைகள் வந்த ஸ்கூட்டர் தீயில் எரியும் பரபரப்பு காட்சி

சென்னை பல்லாவரம் அடுத்த அனாகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் இவர் நேற்று மாலை தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்க்கு திரும்பி கொண்டிருந்த போது பம்மல் பிரதான சாலையில் திடிரென வாகனம் நின்றுள்ளது. மீண்டும் வாகனத்தை இயக்க முயன்ற போது திடிரென வாகனத்தில் இருந்து புகை வந்துள்ளது இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்டீபன் தனது குழந்தைகளுடன் வாகனத்தில் இருந்து இறங்கிய சிறிது நேரத்தில் தீபற்றி எரியத் தொடங்கியது. இதனை கண்ட கடைகளில் இருந்தவர்கள் […]