பீகாரில் காங்கிரஸை ‘கை’ கழுவி, பாஜகவுக்கு கைகொடுத்த பெண்கள் ஓட்டு!

பீகார் சட்டசபை தேர்தலில் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக ஓட்டளித்தனர். மொத்த ஓட்டுப்பதிவு 66.91% ஆக இருந்த நிலையில், பெண்களின் ஓட்டுப்பதிவு 71.6% ஆக உயர்ந்தது; இது ஆண்களைவிட (62.8%) 8.8 சதவீதம் அதிகம்; பீகாரின் தேர்தல் வரலாற்றில் இது மிகப்பெரிய வித்தியாசமாகும். வாக்களித்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையிலும் பெண்கள் ஆண்களை மிஞ்சியிருப்பது இதுவே முதல் முறையாகும். இது என்டிஏ கூட்டணி தற்போது முன்னிலை வகிக்க முக்கிய காரணமாக கருதப்படுகிறது.