பிகார் காங்கிரஸ் தலைவர் ராஜிநாமா..
பிகார் தேர்தல் முடிந்த அன்றே காங்கிரஸில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஷகீல் அகமது விலகுவதாக தெரிவித்துள்ளார்
8தேர்தல் கணிப்பினும் பாஜக கூட்டணி வெற்றி
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன .இந்த நிலையில் நேற்று இரண்டாவது கட்ட தேர்தல் முடிந்ததும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. எட்டு முக்கிய நிறுவனங்கள் வெளியிட்ட தேர்தல் கணிப்புகளில் அனைத்திலும் பாஜக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
பீகாரில் நாளை முதல்கட்ட தேர்தல்
பிஹாரில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அந்த மாநிலத்தில் நாளை 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதற்றமான தொகுதிகளில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பிஹாரில் மீண்டும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி – கருத்துக் கணிப்பில் தகவல்
பிஹார் தேர்தல் குறித்து ஜேவிசி நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டு உள்ளது. பிஹார் தேர்தலில் 122 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி அறுதிப் பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைக்கும். இதில் பாஜக 70 முதல் 81 தொகுதிகளை கைப்பற்றும். அந்த கட்சி பிஹார் தேர்தலில் அதிக இடங்களை பெறும் கட்சியாக இருக்கும். ஐக்கிய ஜனதா தளத்துக்கு 42 முதல் 48 இடங்கள் கிடைக்கும். லோக் ஜன சக்தி – ராம் விலாஸ் கட்சிக்கு 5 […]
ஹைட்ரஜன் குண்டு:
பிகார் வாக்கு திருட்டு குறித்து வெளியிட்ட தகவல் அணுகுண்டு என்றால் இனிமேல் வரப்போவது ஹைட்ரஜன் குண்டு என ராகுல் கூறினார்
பீகாரில் இலவச மின்சாரம்
ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பிஹார் மாநிலத்தில் வீடுகளில் 125 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டுக்கு மக்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவை தேர்தல் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நீட் வினாத் தாள் ரூ.32 லட்சத்துக்கு விற்பனை: பிஹார் மாணவர் வாக்குமூலம்

பாட்னா: நீட் வினாத் தாள் ரூ.32 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது என்று பிஹார் மாணவர் அனுராக் யாதவ்போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. அதற்கு ஒருநாள் முன்னதாக மே 4-ம் தேதி பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஒரு விடுதிக்கு சுமார் 25 மாணவர்களை, இடைத்தரகர்கள் அழைத்து வந்தனர். அவர்களுக்கு நீட் வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, விடைகளை மனப்பாடம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். […]
ராமர் கோவில் குடமுழுக்கு அன்று பீகார் சட்டசபை கலைப்பு?
பீகாரில் இந்தியா கூட்டணி தொகுதிப்பங்கீட்டை இறுதி செய்துள்ளது.தலா 17 இடங்களில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், லல்லுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் போட்டியிடுகின்றன. காங்கிரசுக்கு ஐந்து இடங்கள் , மார்க்சிய பொதுவுடமைக் (லெனின்)கட்சிக்கு ஒரு இடம் என பேசி வருகிறார்கள்.ஏற்கனவே நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தி வரும் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெறும் 22ஆம் தேதி அன்று அதிரடி அறிவிப்பை வெளியிட முதல்வர் நிதீஷ் குமார் திட்டமிட்டுள்ளார்.. அன்று பீகார் சட்டசபையை கலைத்துவிட்டு […]