கடற்கரை செல்வோர் கவனிக்க…

சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட பிற கடற்கரைகளில் குப்பை கொட்டுவோருக்கு ரூ.5000 அபராதம் – மாநகராட்சி எச்சரிக்கை. நாள்தோறும் சராசரியாக 4 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்; தூய்மையான கடற்கரை அனைவரின் பொறுப்பு எனவும் அறிவுறுத்தல்.

கடல் வழியாக ராமேசுவரத்தை வலம் வர ஏற்பாடு

இந்தியாவில் உள்ள முக்கிய “சுற்றுலா, ஆன்மிக தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரத்தை பல்வேறு கடற்பயண திட்டங்களின் மூலம் மேம்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்து சுமார் 100 பேர் பயணம் செய்யும் வகையிலான பெரிய படகில் தனுஷ்கோடி வரை சென்று மீண்டும் அங்கிருந்து புறப் பட்டு தங்கச்சிமடம் வில்லூண்டி தீர்த்தம் வந்து அங்கிருந்து, பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து குருசடை தீவு என ராமேசுவரம் தீவை சுற்றி வரும் வகையில் […]

முள்ளான் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி?

குளிரூட்டும் வசதியுடன் முன் வரிசையில் அமர்ந்த அதிகார வர்க்கம் நிகழ்ச்சி முன்னேற்பாடு குளறுபடியால் தவித்த சாமானிய மக்களை தமிழக அரசு காக்க தவறியது ஏன்? நடிகர் விஜய் கட்சி மாநாட்டிற்கு 21 கேள்விகள்,விநாயர் சதுர்த்தி ஊர்வலம், கோயம்பேட்டில் நடக்கவிருந்தபாஜக.,வின் மாநாடு, அதே போல் ஆண்டாண்டு நடக்கும்ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு எத்தனை பேர் வருவார்கள், எங்கே கார் நிறுத்தம், எங்கே பேருந்து நிறுத்தம், எங்கே உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, எங்கே மருத்துவ மையங்கள், ஆம்புலன்ஸ் வசதிகள், இருசக்கர […]

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகசநிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்டநெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது

சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனிகூடுவதையும் தவிர்க்க வேண்டும். கனிமொழி M.P., டுவிட்

சென்னை கடற்கரையில் விமானப்படை சாகசத்தைக் காண வந்த மக்களில் 5 பேர் சாவு: போதிய வசதிகளை செய்யாத தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்!

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை சென்னை கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியைக் காண வந்த மக்களில் 5 பேர் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்த நிலையில் அவர்களில் பெரும்பான்மையானோருக்கு நிகழ்விடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது; நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்றுள்ளனர். விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகளைக் […]

கடற்கரை ஒன்றில் குவியல் குவியலாக பாம்புகள் பாறை கற்கள் நடுவே ஊர்ந்து செல்வது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது

இந்த வீடியோ கன்னியாகுமரியில் எடுக்கப்பட்டது என்று சிலர் சமூக வலைதளங்களில் பரப்பினர். மேலும், கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்லும்போது பாறை மீது அமர்கிறவர்கள் கவனிக்கவும் எனவும் தெரிவிக்கப்பட்டு அந்த படங்களை பலரும் பகிர்ந்தனர். இது சுற்றுலா பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் இது கன்னியாகுமரியில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்று சிலர் தெரிவித்த போதிலும், சமூக வலைதளவாசிகள் பலரும் கன்னியாகுமரி கடற்கரையில் பாம்பு குவியல் என பகிர்ந்து வருகின்றனர்.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழுவும் தகவலை பதிவிட்டுள்ளது. […]

சென்னை பெசன்ட்நகர் கடந்கரையில் 3 சோலார் பேனல் பொருத்தப்பட்ட மிதவை படகுகள் தரை ஒதுங்கியுள்ளன

மீனவர்கள் அளித்த தகவல் அடிப்படையில் பெசன்ட் நகர் போலீசார் மிதவைகளை கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்த மிதவை மூலம் உளவாளிகளோ, தீவிரவாதிகளோ சென்னைக்குள் நுழைந்திருப்பார்களோ என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.

கடற்கரை-தாம்பரம் இரவு ரயில் சேவை ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று இரவு 11.59 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயிலும், இரவு 11.40 மணிக்கு தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து -தெற்கு ரயில்வே அறிவிப்பு. பயணிகளின் பாதுகாப்பு கருதி, இன்று (29-11-2023) முதல் டிசம்பர் 14ம் தேதி வரை, நள்ளிரவு 12.25 மணி முதல் 2.25 மணி வரையான இரவு ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிப்பு.