பங்காரு அடிகளார் தவத்திரு அடிகளார் என்பதைவிட, தமிழ்த்திரு அடிகளார் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் – திருச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேட்டி

பங்காரு அடிகளாரின் இழப்பு தமிழ் சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாதது. பங்காரு அடிகள் மனிநேயராக திகழ்ந்தவர். கல்வித் தொண்டும் ஆற்றியவர். கருத்தியல் ரீதியாக அவர் வேறுபட்டிருந்தாலும், கொள்கை ரீதியில் அவர் எங்களோடு ஒத்துப் போகிறவர் – கி.வீரமணி.

பங்காரு அடிகளார் உடல், அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, தியான மண்டபத்தில் பக்தர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது!

பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்த, வெளியூர் பக்தர்கள் தியான மண்டபத்தில் காத்திருப்பு

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் காலமானார்: பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி . தலைவர்கள் இரங்கல், அரசு மரியாதையுடன் இன்று உடல் அடக்கம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் நேற்று காலமானார். அவரது மறைவு செய்தி கேட்டு, தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் இன்று மாலை நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி ஆன்மிக குருவாக விளங்கி வந்தவர் பங்காரு அடிகளார். கடந்த ஓராண்டாகவே அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. […]

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் காலமனார் என்ற செய்தியறிந்து வருந்தினோம்

கலைஞர் மீதும், கழகத்தலைவர் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர். மகளிர் எல்லா நாளும் கோயிலுக்குள் செல்லலாம் என்ற முற்போக்கு தளத்தில் ஆன்மிகத்தை நிறுத்திய அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்

அஞ்சலி செலுத்த வரும் பக்தர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு அன்னதானம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இட்லி, தோசை, பொங்கல் என பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து அன்னதானத்தை பெற்று உணவருந்தும் பக்தர்கள்…

பங்காரு அடிகளார் மறைவு – தலைவர்கள் இரங்கல்

அனைத்துப் பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூசை செய்து வழிபடச் செய்த பங்காரு அடிகளாரின் ஆன்மீகப் புரட்சி, மிகவும் மதித்துப் போற்றத் தக்கது; அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், பக்தர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆன்மிக சேவையில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, கோயில் கருவறையில் பெண்களும் பூஜை செய்யலாம் என்பது உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை ஆன்மிகத்தில் செய்த பங்காரு அடிகளாரின் மறைவு ஆன்மிக பக்தர்களுக்கு பேரிழப்பு – அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அனைத்து சமூக […]

அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவெய்திய செய்தியறிந்து வருந்தினேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். பங்காரு அடிகளார் சேவைகளைப் போற்றும் வகையில் அவரது இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். செங்கல்பட்டு : மதுராந்தகம் கோட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவையொட்டி மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

பங்காரு அடிகளார் (82) மாரடைப்பால் காலமானார்

மேல்மருவத்தூரில் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்தவர் பங்காரு அடிகளார். ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தி பெரும் புரட்சி செய்தவர். சித்தர் பீடம், கல்வி நிறுவனங்கள் மூலம் ஏராளமான சமூக சேவைகளையும் செய்தவர் பங்காரு அடிகளார். பங்காரு அடிகளாரின் ஆன்மிக சேவையை பாராட்டி அவருக்கு 2019ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது மத்திய அரசு. பங்காரு அடிகளாரை பின்பற்றும் பக்தர்கள் 15 நாடுகளில் உள்ளனர்.