பெங்களூருவில் தான் பணியாற்றிய ஜெயநகர் பேருந்து பணிமனைக்கு நடிகர் ரஜினிகாந்த் திடீர் விசிட்

பேருந்து பணிமனையில் இருந்த ஊழியர்களை சந்தித்து உரையாடிய ரஜினிகாந்த் பணிமனையில் இருந்த ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினிகாந்த்.

சென்னையில் பெய்த கனமழை காரணமாக பெங்களூருக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்

சென்னையில் நள்ளிரவு முதல் பெய்த கனமழை காரணமாக ஜெர்மனி, டெல்லி, கொல்கத்தாவில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. மேலும் 8 விமானங்கள் தாமதமானதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பூந்தமல்லியில் மின்சார வாரியம் சார்பில் உயரழுத்த கேபிள் புதைக்க தோண்டப்பட்ட ராட்சத பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இருவர் விழுந்த நிலையில் ஒருவர் பலி மற்றொருவர் படுகாயங்களுடன் சிகிச்சை

பாட்னா,பெங்களூரு கூட்டத்தால் மகிழ்ச்சி”

பெங்களூர் கூட்டம் சிறப்பாக முடிந்தது. பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து உள்ளன. பாட்னா,பெங்களூரு கூட்டம் எனக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது. பிரதமர் வேட்பாளர் யார் என்பது முக்கியமல்ல. யார் ஆட்சியில் இருக்கக்கூடாது என்பதுதான் முக்கியம். கூட்டணி கட்சிகளின் ஊழல் வழக்கு அமலாக்கத்துறையின் கண்ணுக்கு தெறியவில்லை

முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ பெங்களூரில்‌ கேரள மாநில முன்னாள்‌ முதலமைச்சர்‌ உம்மன்‌ சாண்டி உடலுக்கு அஞ்சலி

தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ இன்று (18.7.2023) பெங்களூரில்‌, உடல்நலக் குறைவால்‌ காலமான கேரள மாநில முன்னாள்‌ முதலமைச்சர்‌ உம்மன்‌ சாண்டி உடலுக்கு மலர்வளையம்‌ வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல்‌ கூறினார்‌. உடன்‌ அகில இந்திய காங்கிரஸ்‌ கட்சியின்‌ முன்னாள்‌ தலைவர்‌ ராகுல்‌ காந்தி, கர்நாடக மாநில துணை முதலமைச்சர்‌ டி.கே. சிவகுமார்‌, நாடாளுமன்ற உறுப்பினர்‌ டி.ஆர்‌.பாலு ஆகியோர்‌ உள்ளனர்‌.

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூர் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூர் சென்றுள்ள, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்ற கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்