நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்பட்ட வழக்கில் நிர்மலா சீதாராமன் உள்பட சம்பந்தப்பட்ட பாஜகவினர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு பிரதிநிதிகள் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

பெங்களூரு ராமேசுவரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில், தமிழர்களைத் தொடர்புப்படுத்தி பேசியது தொடர்பாக மதுரை சைபர்க்ரைம் போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி

மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்

பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, தானியங்கி தண்ணீர் வழங்கும் மையங்களில், ஒருவருக்கு ஒரு கேன் மட்டுமே தண்ணீர் வழங்கப்படும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன

இந்த தானியங்கி மையங்களில் 5 ரூபாய் நாணயம் செலுத்தி, தண்ணீரை பிடித்துச் செல்ல‌லாம். ஏற்கனவே தட்டுப்பாடு காரணமாக காலை மற்றும் மாலையில் மட்டுமே தண்ணீர் விற்கப்படுகிறது. இந்நிலையில், ஒருவருக்கு ஒரு கேன் மட்டுமே என அறிவிக்கப்பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை பெங்களூரு நீதிமன்றம் நடத்தி வந்தது

இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சசிகலா, அவருடைய அண்ணி இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் அங்குள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டன. இதனிடையே சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளிகளின் தண்டனை காலம் நிறைவுற்ற நிலையில், பொருட்களை ஏலம் விடுமாறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நகைகளை ஏலம் விடுவதற்கு பதிலாக தமிழக அரசிடம் ஒப்படைக்கலாம் என்று பெங்களூரு நீதிமன்றம் தெரிவித்தது. அந்த வகையில், […]

பெங்களூரின் லாகரே பகுதியில் வீடு ஒன்று பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்ததால் பரபரப்பு

வேறொரு கட்டிடம் கட்டுவதற்காக டவர் அமைக்கப்பட்டிருந்த வீட்டின் அருகில் குழி தோண்டியபோது, அஸ்திவாரம் வலுவிழந்ததால் அந்த வீடு இடிந்து விழுந்துள்ளது நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை

அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயண திட்டத்திற்கு எதிர்ப்பு: பெங்களூருவில் இன்று நள்ளிரவு முதல் தனியார் பஸ்கள் ஓடாது

அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் அரசின் சக்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் தனியார் பஸ்கள் மற்றும் வாகனங்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பஸ்களில் இலவச பயணம் :கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சக்தி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு பஸ்களில் பெண்கள் மாநிலம் முழுவதும் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்களுக்கு வருவாய் இழப்பு […]