மணிப்பூரில் 20ஆம் தேதி வரை இணைய சேவைக்கு தடை

மணிப்பூரில் மொபைல் இணைய சேவைக்கு விதிக்கப்பட்ட தடை 20ஆம் தேதிவரை நீட்டிப்பு. மணப்பூரில் இடஒதுக்கீடு தொடர்பாக குக்கி, மெய்தி பிரிவினருக்கு இடையே மோதல். அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 5 மாவட்டங்களில் ஊரடங்கு.
தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணிகள் திரும்பிச் சென்றனர்

தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றத்துடன் காணப்படுவால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி பகுதிக்கு சென்று சுற்றி பார்த்து செல்வது வழக்கம். காலை 8 மணிக்கு மேல் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் தனுஷ்கோடி சென்று ஆய்வுசெய்ய உள்ளனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் பள்ளிகள், கல்லூரிகளை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்வதை தடுக்க உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறைகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதற்காக சென்னை மாநகராட்சி பகுதிகளில் நியமன அலுவலர்,உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்களைக் கொண்டு 19 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று தமிழகம் முழுவதும் 247 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் […]