சபரிமலை கோயில் நடை அடைப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் 16ம் தேதி துவங்கிய மண்டல காலம் நிறைவு. இன்று இரவு 1 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும். மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும் – கோயில் நிர்வாகம்.

சபரிமலையில் ஐயப்ப விக்கிரகத்தில் நேற்று மாலை தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.

இன்று பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் 16ம் தேதி தொடங்கிய 41 நாள் நீண்ட மண்டல காலம் இன்றுடன் நிறைவடைகிறது. பிரசித்தி பெற்ற மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது. மண்டல பூஜையை முன்னிட்டு நேற்று மாலை ஐயப்ப விக்கிரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. முன்னதாக நேற்று மதியம் பம்பையை அடைந்த இந்த தங்க அங்கி பம்பை கணபதி கோயிலில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது. பின்னர் ஊர்வலமாக […]