சென்னை துறைமுகத்தில் 110 கோடி மதிப்புள்ள 112 கிலோ சூடோ எபிட்ரின் என்ற போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆஸ்திரேலியாவுக்கு செல்லவிருந்த சரக்கு பெட்டகம் ஒன்றை சோதனை செய்ததில் போதைப் பொருள் சிக்கியது இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதே போன்று நான்கு முறை ஆஸ்திரேலியாவிற்கு போதைப் பொருட்களை கடத்தியது கண்டுபிடிப்பு. இந்த போதைப்பொருள் சென்னைக்கு எங்கிருந்து வந்தது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையின் போது குற்றவாளிகள் பயன்படுத்திய 2 சொகுசு கார்கள் மற்றும் 3.9 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவையும் பறிமுதல்.
விசா கட்டணத்தை இரு மடங்கு உயர்த்திய ஆஸ்திரேலியா

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை சுமார் இரு மடங்காக உயர்த்தியுள்ளது ஆஸ்திரேலியா. இந்தக் கட்டண உயர்வு (ஜூலை 1) முதல் அமலுக்கு வருவதாகவும் அந்த நாடு தெரிவித்துள்ளது. அந்நாட்டின் வீட்டு வசதி துறையில் கடுமையான நெருக்கடி நிலை நீடித்து வருவதாக தகவல். இதற்கு காரணம் வெளிநாடுகளில் இருந்து குடியேறுபவர்கள் எனச் சொல்லப்படுகிறது. அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நகர்வை ஆஸ்திரேலியா முன்னெடுத்துள்ளது
ஐபிஎல் 2024 மினி ஏலத்தின் முதல் சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கடும் போட்டியிட்டு ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை ரூ.6.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்
உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா ஆட்டத்தில் கோலி, வார்னர் சாதனை

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சென்னையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.சென்னை, ஐ.சி.சி. நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

50 ஓவர் உலகக்கோப்பை, இந்தியா, தென்னாப்பிரிக்கா தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி விவரம்: வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஷ், அலெக்ஸ் கேரி, மார்க்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்செல் மார்ஷ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டீ, சீன் அபாட், ஆஸ்டன் அகர், ஆடம் ஷம்பா, தன்வீர் சங்கா, கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் எல்லிஸ்.