வைஷ்ணவா கல்லூரி சுரங்கபாதை விரைவில் அமைக்க கோரி நலச்சங்கத்தினர், வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் குடியிருப்போர் நலசங்கத்தினர், வியாபாரிகள் என 100 க்கும் மேற்பட்டவர்கள் தீடீர் சாலை மறியல், வைஷ்ணவா கல்லூரி ரெயில்வே கேட்டில் நாள்தோரும் ரெயில் மோதி உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், அதற்காக திட்டமிடப்பட்ட அரசு பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் சுரங்கபாதை விரைவில் அமைக்கவேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை குரோம்பேட்டை வைணவா கல்லூரி ரெயில்வே கேட்டை கடந்து ராதாநகர், நெமிலிச்சேரி, உள்ளிட்ட 2 லட்சம் பேர் பயன் படுத்தும் நிலையில் நாள்தோரும் ரெயில் […]
குரோம்பேட்டை சமூக சேவகர் வி.சந்தானம் 86 மற்றும் மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் பயணம் என்ற தலைப்பில் மலர் வெளியிடப்பட்டது

இந்த மலரை அறப்போர் இயக்கத்தின் தலைவர் ஜெயராம், வெங்கடேஷ் வெளியிட்டார். முதல் மலரை சி.வி ராஜகோபால் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நங்கநல்லூர் ராமராவ், சிட்லப்பாக்கம் விஸ்வநாதன், தாம்பரம் சீதாராமன் கலந்துகொண்டு பேசினார்கள்.மூத்த குடிமக்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன் செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். இறுதியில் அறப்போர் இயக்கத்தின் தலைவர் ஜெயராம் வெங்கடேசன் சிறப்புரை ஆற்றிய பிறகு வி.சந்தானம் ஏற்புரை ஆற்றினார். வக்கீல் ராமதாஸ் நன்றி கூறினார்.
குரோம்பேட்டை நேரு நகர் ராதா நகரை இணைக்கும் பி.டி.சி டெப்போ சாலை மற்றும் நேரு நகர் அய்யாசாமி மேல்நிலைப்பள்ளி சாலை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலை குண்டும் குழியுமாக புழுதி காடாக காட்சியளிப்பதை கண்டித்து சீர் செய்ய வேண்டி மூத்த குடிமக்கள் நலச்சங்கம் மக்கள் விழிப்புணர்வு சங்கம் மா.போ.சி பரலி தமிழ் பேரவை சார்பில் மீனாட்சி சுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதில் பொதுமக்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் குரோம்பேட்டை தபால் நிலையத்தில் தூய்மை இந்தியா குறித்து விழிப்புணர்வு கூட்டம்

மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் குரோம்பேட்டை தபால் நிலையத்தில் தூய்மை இந்தியா குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. அதில் சமூக சேவகர் வி.சந்தானம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார் மற்றும் போலீஸ் கிருஷ்ணமூர்த்தி அட்வகேட் ராமதாஸ், பாலு கலந்து கொண்டனர். போஸ்ட் மாஸ்டர் மூர்த்தி வரவேற்றார். இறுதியாக மக்கள் தொடர்பு அதிகாரி கிருஷ்ணன் நன்றி கூறினார். சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக் கொள்வேன் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. உறுதி மொழியை வி.சந்தானம் கூற தபால் நிலைய ஊழியர்கள் […]
மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்கம் சார்பாக உலக நீரழிவு தினத்தை முன்னிட்டு இலவச நீரழிவு மருத்துவ முகாம்

நேரு நகர் குமரன் குன்றம் முதியோர் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 50&க்கும் மேற்பட்ட முதியோர்கள் பரிசோதனை செய்து பலன் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் தலைவர் இ.ராஜமாணிக்கம் கே.எம்.ஜே.அசோக், வி.ஆர்.அழகப்பன், இ.சதீஷ்குமார், ஆர்.வி.சங்கர், ஹரிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் குரோம்பேட்டை நியூ காலனி பாரதிபுரம் ஆகிய தெருக்களில் உள்ள பட்டாசு கழிவுகளை அகற்றினார்கள்

சேவா ரத்னா டாக்டர் வி,சந்தானம் தலைமையில் நடந்தது. இதில் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். மாநகராட்சி உதவியுடன் இந்த சேவை நடந்தது.
குரோம்பேட்டை வட்டார நாடார் ஐக்கிய சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

குரோம்பேட்டை வட்டார நாடார் ஐக்கிய சங்கம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் தெற்கு தெருவில் உள்ள திருமண கூடத்தில் நடைபெற்றது. ஏ.ஏ.முருகேசன் நாடார் வரவேற்புரை ஆற்றினார். தலைவர் வி.எஸ்.பி.மதிவாண நாடார் சங்கத்தின் வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார். ஆண்டறிக்கையை பொதுசெயலாளர் டி.எஸ்.முருகேசன் நாடார் வாசித்தார். வரவு செலவு கணக்குகளை மோரிஸ் நாடார் வாசித்தார். இந்நிகழ்வில் மூத்த உறுப்பினரும் ஆலோசகரமான ஏ.ராமஜெயம் நாடார். செயலாளர்கள் எஸ்.வெற்றிவேல் நாடார். எஸ். முருகேசன் நாடார். சங்க துணை தலைவர் டி.தர்மபால் நாடார். மற்றும் திரளான […]
பெருங்களத்துர் ரெயில் நிலையத்தில் குடியிருப்போர் நல சங்க உறுப்பினர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்

தூய்மை தினத்தை ஒட்டி தென்னக ரயில்வே அலுவலர்கள் ஊழியர்களும், பெருங்களத்தூர் பீர்க்கங்கரணை குடியிருப்பு நலச்சங்கம், PP residence welfare Association இணைந்து ரயில் நிலையத்தை சுத்தம் செய்கின்ற பணியில் ஈடுபட்டனர். ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நலச்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு மிக சிறப்பாக ரயில் தண்டவாளம் மற்றும் பயணிகள் அமருமிடம் Subway அனைத்து பகுதிகளும் சுத்தம் செய்யப்பட்டது. இதில் திரளான ரயில்வே அலுவலர்கள் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
குரோம்பேட்டை ஸ்ரீ சரணாகதி சேவா டிரஸ்ட் மற்றும் மக்கள் விழிப்புணர்வு சங்கம்

குரோம்பேட்டை ஸ்ரீ சரணாகதி சேவா டிரஸ்ட் மற்றும் மக்கள் விழிப்புணர்வு சங்கம் இணைந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தேவையான சேர்கள் ‘ஸ்டுல் நன்கொடையாக வழங்கப்பட்டது. இவைகளை துணை தலைமை மருத்துவர் டாக்டர் காமேஷ் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சிக்கு சமூக சேவகர் வி.சந்தானம் தலைமையேற்று நடத்தினார்.