பல்லாவரம் தொகுதியில் 22 புதிய மின்மாற்றிகள்

பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதி ஒரு கோடியே 16 லட்சத்தில் 22 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி திறந்துவைத்தார் பல்லாவரம் தொகுதியில் பல்வேறு இடங்களில் குறைந்த மின் அழுத்த ஏற்படுவதாக எழுந்த புகாரின் பேரில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தொகுதி நிதி ஒரு கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் பல்லாவரம், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், நெமிலிச்சேரி, பம்மல் மற்றும் பொழிச்சலூர் ஊராட்சி என 22 இடங்களில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது, இதனை சட்டமன்ற உறுப்பினர் […]

ஜூன் 12ம் தேதி தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்

சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற உள்ளது. துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும் நாட்கள் குறித்து முடிவு செய்யப்படும். ஜூன் 24ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று நிறைவடைகிறது

வேளாண் மண்டலத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தையும் சேர்க்கும் வகையில், வேளாண் மண்டல திருத்த சட்ட முன் வடிவு தாக்கல் ஆகிறது. சட்ட முன்வடிவை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பான சட்ட முன் வடிவும் இன்று தாக்கல் ஆகிறது. ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தும் சட்ட முன்வடிவு – போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தாக்கல் செய்கிறார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது

மறைந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் லியாவுதீன் சேட், பழனியம்மாள், ஆண்டமுத்து ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு மெளன அஞ்சலி. பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம்.

தமிழ்நாடு சட்டப்பேரவை அக்டோபர் 9ம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

“நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால், தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் நிறைவேற்றப்படும்” – அப்பாவு