ஆசிய கோப்பை தொடர் : இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேபாளம் அணியை வீழ்த்தியது

முதலில் ஆடிய நேபாளம் அணி 48.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி 230 ரன்களில் சுருண்டது. மழை காரணமாக இந்திய அணிக்கு டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 23 ஓவர்களில் 145 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணியின் ஓப்பனர்கள் ரோகித் மற்றும் கில் ஆட்டமிழக்காமல் 20.1 ஓவர்களில் இலக்கை எட்டினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் – 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.