டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக என்.ஐ.ஏ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் பரிந்துரை

காலிஸ்தான் தீவிரவாத அமைப்பிடம் இருந்து 2014 முதல் 2022-ம் ஆண்டு வரை ஆம் ஆத்மி கட்சி ரூ.134 கோடி பணம் பெற்றதாக குற்றம்சாட்டி, என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரை. உலக இந்து கூட்டமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் அஸ்ஸூ மோங்கியா அளித்த புகாரில் துணைநிலை ஆளுநர் உத்தரவு. பதவியில் உள்ள முதலமைச்சர் மீது என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரைப்பது இதுவே முதல்முறையாகும்.

அமலாக்கத்துறையால் கைதாகியுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது மனுவும் நிராகரிப்பு

“மாநிலத்தை நாங்கள் நிர்வாகிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தீர்வை அளிக்க முடியாது” என நீதிபதிகள் கருத்து

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்திற்கு ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் வருகை

கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த நவடிக்கைகள் குறித்த ஆலோசனை என தகவல்

இந்திய கூட்டணி கட்சி தலைவர்கள் போராட்டம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லியில் போராட்டம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி,சரத் பவார், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்பு திருச்சி சிவா, திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பு

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

அவருக்கு 9வது முறை சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை. கெஜ்ரிவால் வரும் 21ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை உத்தரவு.

“குடியுரிமை திருத்த சட்டம் இந்திய நாட்டுக்கு ஆபத்தானது;

மத்திய அரசின் இந்த நடவடிக்கை வாக்கு வங்கி அரசியலின் ஒரு பகுதியே; பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளில் 3 கோடி சிறுபான்மையினர் உள்ளனர்; குடியுரிமை திருத்த சட்டம் மூலம் இவர்கள் இந்தியாவுக்கு வரும்போது, அவர்களுக்கு வேலைவாய்ப்பு யார் தருவது ?”

டெல்லி முதல்வர் எந்நேரமும் கைது?

சரத்பவார் எச்சரிக்கை! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அல்லது நாளை கைது செய்யப்படலாம் என தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திரா பவார்) கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று சரத்பவார் கூறியதாவது,ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் சிபுசோரனை கைது செய்தனர். டெல்லியில் இரண்டு அமைச்சர்களை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். இப்போது டெல்லி முதல்வருக்கு ஏழாவது முறையாக அமலாக்கத்துறை சமன் அனுப்பி உள்ளது. இன்று அல்லது நாளை கூட அவர் […]

மதுபான கொள்கை ஊழல் புகார்

அமலாக்கத்துறை முன் கெஜ்ரிவால் இன்று ஆஜர். அமலாக்கத்துறை முன் இன்று ஆஜராகும் கெஜ்ரிவால் கைது? ஆம் ஆத்மி அச்சம்?

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

புதிய மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ். நவம்பர் 2ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.