“சிபிஐ கைது செய்தது சட்டவிரோதம் இல்லை என்றபோதும் ஜாமின் “

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம். சிபிஐ கைது செய்தது சட்டவிரோதம் இல்லை என்றபோதும் ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம். 2 வழக்குகளிலும் ஜாமின் கிடைத்ததால் சிறையிலிருந்து விரைவில் வெளியே வரவுள்ளார் கெஜ்ரிவால்.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை திகார் சிறையில் வைத்து கைது செய்தது CBI

கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில் சிபிஐ தற்போது கைது செய்துள்ளது.

விசாரணை நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை இன்று அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஏற்பு

ஜூன் 2-ம் தேதி சரணடைவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு;

விசாரணை நடைபெறும் சமயங்களில் டெல்லி மக்கள் தனக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்; டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் ஜூன் 1-ம் தேதி வரை உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியிருந்த நிலையில் ஜூன் 2-ம் தேதி சரணடைவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இம்மனு மீது இன்று பகல் 2 மணிக்கு விசாரணை நடைபெற உள்ளது.

இடைக்கால ஜாமினை நீட்டிக்கக் கோரி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்

டெல்லி புதிய மதுபான கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மக்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர ராவின் மகளும், பிஆர்எஸ் கட்சி மூத்த தலைவருமான கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடந்த மார்ச் […]

விசாரணை நீதிமன்றத்தை அணுகி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஜாமின் பெற்றுக் கொள்ளலாம் : உச்சநீதிமன்றம்

டெல்லி : விசாரணை நீதிமன்றத்தை அணுகி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஜாமின் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணையின் போது, கெஜ்ரிவால் கைது நடவடிக்கை எந்த ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்றும் ஆம் ஆத்மி மீதான குற்றச்சாட்டை எவ்வாறு நிரூபிக்கப் போகிறீர்கள் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

கெஜ்ரிவால் காணொளியில் பேச மனு: அபராதத்துடன் தள்ளுபடி

சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவை உடன் காணொளியில் கலந்துரையாட அனுமதிக்க கோரிய பொதுநல மனு. ரூபாய் 1 லட்சம் அபராதத்துடன் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு.