விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் இரு நாட்களுக்கு முன்பு, போராட்டத்தில் பெண் டி.எஸ்.பி. தாக்கப்பட்ட சம்பவத்தில் தலை மறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது
ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.