திருப்பதியில் சந்திரபாபு கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலையில் டயருக்கு தீ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேச கட்சியினர்

ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பாதுகாப்பு காரணமாக ஆந்திராவிற்கு செல்லும் பேருந்துகள் தமிழ்நாடு எல்லையில் நிறுத்தம். திருப்பதி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் திரும்பி வருவதற்கு பேருந்து இல்லாததால் அவதி.

சென்னையில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் சையது நபில் அகமது என்பவர் கைது

கேரளா, திருச்சூரை மையமாக வைத்து செயல்பட்ட ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் சையது நபில் அகமது வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது NIA அதிகாரிகள் கைது செய்தனர்.

ஆந்திராவுக்கு லாரியில் கடத்த முயன்ற 50 டன் ரேசன் அரிசி பறிமுதல்

திருவள்ளூர்:சோழவரம் பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம், நகரிக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் இன்று காலை திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 2 லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அதில் 50 டன் ரேசன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. […]

பல்லடம் அருகே 4 பேர் கொல்லப்பட்ட வழக்கு: தேடப்பட்டு வந்த இருவர் காவல்நிலையத்தில் சரண்

பல்லடம் அருகே 4 பேர் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான வெங்கடேஷ், சேனை முத்தையா ஆகியோர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். ஏற்கனவே செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தேடப்பட்டு வந்த இருவர் சரணடைந்தனர்.

திருநங்கையை வெட்டிய கணவர் கைது

சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் திருநங்கை சுக்ரியா (20)இவர் ஜாம்பஜார் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந் நிலையில் கடந்த நான்கு மாதமாக கார்த்ததிக் மற்ற திருநங்கைகளுடன் பழகி வந்ததால் அவரின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் சுகிரியா தொடர்பை நிறுத்தி வைத்துள்ளார். நேற்று இரவு தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் சுங்கசாவடியில் நின்றிருந்த சுக்ரியாவை காண்பதற்கு வந்த கார்த்திக் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்பு ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கார்த்திக் தான் […]

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் கைது – அமலாக்கத் துறை நடவடிக்கை

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.மும்பை, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமாக வலம் வந்த ஜெட் ஏர்வேஸ் 2017-ம் ஆண்டுக்குப் பிறகு கடும் நஷ்டத்தைச் சந்திக்கத் தொடங்கியது. 2016- 17 நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் அந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.600 கோடியாக இருந்தது. அடுத்த ஓராண்டில், அதாவது 2017-18 நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் அந்நிறுவனம் ரூ.1,000 கோடி நஷ்டத்தைச் சந்தித்தது. […]

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல் கைது!

கனரா வங்கியில் இருந்து கடன் பெற்று ஜெட் ஏர்வேஸ் அல்லாத வேறு நிறுவனங்களுக்கு பயன்படுத்தி மோசடி செய்த வழக்கில், ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல் கைது!

₹3.50 லட்சம் லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவு அலுவலர் சங்கீதா

விருதாச்சலம் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் ₹3.50 லட்சம் லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவு அலுவலர் சங்கீதா, கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது. சங்கீதாவுக்கு உடந்தையாக இருந்த உதயகுமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

சேலத்தில் பிரியாணி கடையில் சாப்பிட்ட பிறகு எலும்பு துண்டுகளை நாய்க்கு பார்சல் கட்ட சொன்னதால் தகராறு-4 பேர் கைது

சேலத்தில் பிரியாணி கடையில் சாப்பிட்ட பிறகு எலும்பு துண்டுகளை நாய்க்கு பார்சல் கட்ட சொன்னதால் ஏற்பட்ட தகராறில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.சேலம்சூரமங்கலம்: பிரியாணி கடை சேலம் ஜங்சன் மெயின் ரோடு முதல் கேட் அருகில் பிரபல பிரியாணி கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு சாப்பிட வந்தவருக்கும், கடை ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே அது மோதலாக மாறியது. இதுதொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் வைரலானது. இதனை அறிந்த சூரமங்கலம் போலீசார் அந்த கடைக்கு […]

காஞ்சிபுரம் மாவட்ட பத்திர பதிவாளர் அலுவலகத்தில் 1லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய இரண்டு ஊழியர்கள் கைது

காஞ்சிபுரம் மாவட்ட பத்திர பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவை ரத்து செய்து மேல் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்ய 1லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய இரண்டு ஊழியர்கள் கைது. காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ்காரர் நடவடிக்கை. காஞ்சிபுரம் மாநகராட்சி ஓரிக்கை பகுதியில் மாவட்டப் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் சென்னையைச் சேர்ந்த உலகநாதன் என்பவர் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா பண்ருட்டி பகுதியில் உள்ள தனது மாமியாரின் சொத்துக்களை சிலர் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்து கொண்டுள்ளதாகவும், அந்த […]