ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அதிரடி கைது: எம்.பி. பதவி பறிப்பு; 5 ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாது

இஸ்லாமாபாத்: தோஷகானா முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதனால் அவரது எம்பி பதவியும் பறிக்கப்பட்டு, மேலும் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகி உள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான்(70) பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்த போது பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக அவர் மீது 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் இம்ரான் கான் […]
உச்சநீதிமன்றம் குறித்து அவதூறு பேச்சு – பத்ரி சேஷாத்ரி கைது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் அவதூறாக பேசியதாக பத்ரி சேஷாத்ரி கைது. வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அவரை சென்னையில் கைது செய்து, 3 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மணிப்பூரில் கொலை நடக்கத்தான் செய்யும், தலைமை நீதிபதி சந்திரசூட் என்ன செய்ய முடியும், அவரிடம் துப்பாக்கியைக் கொடுத்து மணிப்பூர் அனுப்பி வைக்கலாம் என பத்ரி சேஷாத்ரி பேச்சு.
சேலம் சமூக நலத்துறையில் பரபரப்பு: அரசு உதவித்தொகை திட்டத்தில் ரூ.89 லட்சம் மோசடி-தற்காலிக பணியாளர், திருநங்கைகள் 2 பேர் கைது

அரசு நிதி உதவி திட்டத்தில் ரூ.89 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தற்காலிக பெண் பணியாளர், திருநங்கைகள் 2 பேர் என 3 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதனால் சேலம் சமூக நலத்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சேலம்சமூக பாதுகாப்பு திட்டம் சேலம் தெற்கு தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அலுவலகம் உள்ளது. இங்கு தாசில்தாராக பணியாற்றி வருபவர் தமிழ்முல்லை. இந்த அலுவலகத்தில் இருந்து முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் […]
அன்புமணி கைது தாம்பரத்தில் பாமக மறியல்

என்.எல்.சி நிர்வாகத்திற்கு எதிராக பாமகவினர் ஆர்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். அப்போது பேருந்துகள் போலீஸ் வாகனங்கள் அடித்து சேதமான நிலையில் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டர். இதனை கண்டிக்கும் விதமாக தாம்பரத்தில் பாமக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கருப்பசாமி தலைமையில் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் பேரூந்து உள்ளிட்ட வானகங்களை மறித்து சாலையில் படுத்த பாமகவினர் 50 க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் மார்கமாக போக்குவரத்து […]
தாம்பரத்தில் காட்டன் சூதாட்டத்தில் மோதல் 3 பேர் கைது

தாம்பரம், ராஜாஜி ரோடு, ஜி.எஸ்.டி.சாலை சந்திப்பில் தடை செய்யப்பட்ட காட்டன் லாட்டரி விற்பனையில் ஈடுபடும் நபர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் முத்து என்பவரை கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து 2000 ரூபாய் பணத்தை பறித்து சென்றதாக முத்து என்பவர் தாம்பரம் காவல் நிலையத்தில் செந்தில்குமார், மணிமண்ணன் ஆகியோர் மீது புகார் அளித்தார். அதன் பேரில் தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட காட்டன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரை […]
தமிழக மீனவர்கள் 9 பேர் கைது

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மண்டபம் பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது. நெடுந்தீவு அருகே கைதான 9 மீனவர்களையும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படை விசாரணை.
பெண்ணுக்கு ஆபாச தொல்லை தாம்பரம் அதிமுக பிரமுகர் கைது

தாம்பரம் அடுத்த இரும்புலியூரை சேர்ந்த பெண் சீபா(35) சில மாதம் முன்பாக குடும்ப பிரச்சினை காரணமாக தாம்பரம் காவல் நிலையில் சென்றுள்ளார். அப்போது வேறு ஒரு புகார் சம்மந்தமாக அதே இரும்புலியூர் ஜெருசலம் நகரை சேர்ந்த தாம்பரம் 53 வட்ட செயலாளர் குமணன்(47) என்பவர் சீபா செல்போன் என்னை பெற்றுள்ளார். நாட்கள் போக போக தரகுறைவான வார்த்தைகளாலும் பாலியியல் தொல்லை கொடுக்கும் விதமாக குறுஞ்செய்திகளையும், ஆடியோகளையும் அனுப்பியுள்ளார். இதனால் சீபா தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த […]
பல்லாவரத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது

பல்லாவரம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யும் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 4 பேர் கைது, 5 லட்சம் மதிப்புள்ள 30கிலோ கஞ்சா பறிமுதல் செய்த குன்றத்தூர் மதுவிலக்கு போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசர், பல்லாவரம் சுற்றுவட்டத்தில் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குன்றத்தூர் மதுவிலக்கு மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவளின் பேரில் ஆய்வாளர் மலதி, உதவி ஆய்வாளர்கள் ராமசந்திரன், சுரேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர […]
ஒரு லட்சத்திற்கு மேல் பொருள் வாங்கி மோசடி போலி காசோலை கொடுத்தவர் தாம்பரத்தில் கைது

தாம்பரத்தில் 12 லட்சம் ரூபாய்க்கு வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி கொண்டு காசோலை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை மேற்கு தாம்பரம், முடிச்சூர் பிரதான சாலையில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் பிரபல தனியார் ஷோரூம் (சத்யா ஏஜென்சிஸ்) உள்ளது. இங்கு சுரேஷ்பாபு (53) என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த மாதம் 3ம் தேதி ஷோரூமில் பணியில் இருந்த போது வெங்கடபதி என்பவர் […]
சென்னை ஜமீன் பல்லாவரத்தில் வீட்டின் சுவர் ஏறி குதித்து செல்போன்களை திருடிய கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஆகாஷ் என்பவர் வீட்டுக்குள் புகுந்து திருடிய விஜயகுமார் (21), தினேஷ் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.