பாராளுமன்ற தேர்தலையொட்டி தனது உரிமம் பெற்ற கை துப்பாக்கியை ஆம்ஸ்ட்ராங் போலீசிடம் ஒப்படைத்ததாகவும், இதுவரை அதை போலீசார் திருப்பி தராதது சந்தேகத்தை ஏற்படுகிறது என்று உறவினர்கள் தெரிவிக்கின்றனர்
“ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டது திட்டமிட்ட அரசியல் படுகொலை என்பதால் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்”

பகுஜன் சமாஜ் கட்சியின் அவசர மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல் ஆம்ஸ்ட்ராங் உடலை அரசு மரியாதையுடன் பொது இடத்தில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தல் “தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது” “உண்மை குற்றவாளிகளை கைது செய்து கொலைக்கான பின்னணியை கண்டறிய வேண்டும்” “உளவுத்துறையின் தோல்வியால் படுகொலை – உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.யை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும்”
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்

பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான திருமலை ஆம்ஸ்ட்ராங் வீடு உள்ள பகுதியில் இருக்கும் பள்ளி அருகே ஆட்டோவை நிறுத்துவது போல ஒருவாரமாக நோட்டமிட்டு வந்த திருமலை ஆம்ஸ்ட்ராங் அடிக்கடி தான் கட்டி வரும் வீட்டருகே குறைந்த அளவிலான நண்பர்களுடன் வருவதை நோட்டமிட்டு புன்னை பாலுவுக்கு தகவல் கொடுத்த திருமலை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது

கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது. திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.