சீசிங் ராஜாவின் உடலை பார்த்து கதறி அழுத மகள்

சென்னையில் இன்று அதிகாலையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி சீசிங் ராஜா ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உடலை பார்த்து கதறி அழுத மகள் “செய்யாத குற்றத்திற்காக கொலை செய்து விட்டீர்களே” என கதறி அழுத மகள் ராயப்பேட்டை பிணவறை வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர்

▪️. போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயற்சி செய்ததால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக தகவல். தலைமறைவாக இருந்த அவர் கடப்பாவில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார்.. என்கவுன்ட்டர் செய்யப்பட்ட அவர் மீது 5 கொலை உட்பட 33 வழக்குகள் நிலுவையில் உள்ளன..

ஆம்ஸ்ட்ராங் கொலை தாம்பரத்தில் பிடிபட்ட ரவுடி

ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் தேடப்படும் சீசிங் ராஜாவின் கூட்டாளி சஜித் தை தாம்பரம் போலீசார் பிடித்து விசாரணை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் பிரபல ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் தேடிவரும் நிலையில் தாம்பரம் காவல் நிலைய கொலை வழக்கு, கொலை முயற்சி, அடிதடி, வழிபறி என பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தேடப்படும் குற்றவாளர் சஜித் என்பவனை பிடித்த தாம்பரம் போலீசார் விசாரணை செய்துவருகிறார்கள்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி பூவிருந்தவல்லி கிளைச் சிறையில் இருந்த திருமலைக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இந்தக் கொலை வழக்கில் போலீசார் ஒவ்வொரு கட்டமாக அலசி ஆராய்ந்து சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், திருவேங்கடம் என்பவர் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். மேலும் இந்தக் கொலையில் தொடர்புடையவர்களைப் பிடிக்க தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் வழக்கில் கைதாகி பூவிருந்தவல்லி கிளைச் சிறையில் இருந்த திருமலைக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பூவிருந்தவல்லி அரசு […]

ரவுடி சம்போ செந்தில் கூட்டாளிக்கு அடைக்கலம்? – இயக்குநர் நெல்சன் மனைவியிடம் விசாரணை ஆம்ஸ்ட்ராங் கொலை

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரத்தில் பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்திய விவகாரம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளிக்கு அவர் அடைக்கலம் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் […]

“பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி, இதை திட்டமிட்ட மற்றும் நடைமுறை படுத்தியவர்களையும் கைது செய்ய வேண்டும்;

தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க சில கட்சிகள் முயற்சி செய்து வருகின்றனர், அதில் பாஜகவிற்கு முக்கிய பங்கு உண்டு” -சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பேட்டி

திமுக ஆட்சிக்கு வந்தபின்காவல்துறை அதிகாரிகளுக்கு முழுமையான சுதந்திரம் கிடையாது

பொதுமக்கள், பெண்கள், அரசியல் கட்சியின் பொறுப்பாளர்களுக்கும் பாதுகாப்பில்லை; திட்டமிட்டுதான் ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது எடப்பாடி பழனிசாமி

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறுகையில்

“தமிழகத்தில் சமீபகாலமாக 17 சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழக பாஜக மூத்த தலைவர்கள் டெல்லியில் தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் மற்றும் அதிகாரிகளை சந்திக்க உள்ளனர். தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவருக்கு நீதி கிடைக்க வேண்டும். மறைந்த கே. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரிக்குமாறு மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டுக்கொள்கிறோம்

சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட, பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர், திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இல்லத்திற்குச் சென்று, அவரது திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினோம்

பெருந்துயரில் ஆழ்ந்திருக்கும் அவரது மனைவிக்கு, ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. அறிவார்ந்த தலைவராக விளங்கியவர். கல்விதான் சமூகத்தை முன்னேற்றும் என்பதை உணர்ந்து, பல இளைஞர்களின் உயர்கல்விக்கு ஊன்றுகோலாக இருந்தவர். சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்கும் குரல் கொடுத்தவர். அதற்காகக் கடுமையாக உழைத்தவர். திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களது மறைவு, சமூக ஒற்றுமையை விரும்பும் மக்கள் அனைவருக்கும் பேரிழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன். இந்தக் கொடூரமான செயலில் தொடர்புடைய அனைவர் மீதும், கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் […]