அனகாபுத்தூர் பெட்ரோல் பங்கில் ஏசி எந்திரம் வெடித்து மூணு பேர் படுகாயம்.
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று புதியதாய் திறக்கப்பட உள்ளது,அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில்.அதன் அலுவலகத்தில் புதிய ஏசி இயந்திரம் பொருத்தும் பணி நடைபெற்றது. அதனை கள்ளக்குறிச்சி மாவட்டம், பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சையத் சபீர்(வயது-22), முகிர்தீன்(வயது -24) மற்றும் சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சபிருல்லா(வயது-25) ஆகிய மூன்று பேர் பொருத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அறையின் உள்ள புதிய ஏசியை பொறுத்தி […]