32nd ANNUAL SPORTS MEET 2024 – 25

Shikshaa Mat.Hr.Sec.School, Hasthinapuram celebrated their 32nd Annual Sports Meet on 14th September 2024 in grandeur. The event began with the welcoming of the Chief Guest Mr.Christin Jayasil, Asst.Commissioner of Police, Selaiyur Division by the school band and the Scouts & Guides. The event began with the prayer to the Almighty. The gathering was welcomed by […]
கார்கில் போர் வெற்றியின் 25 வது ஆண்டு விழா அஸ்தினாபுரம் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடந்தது

இந்த நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். கார்த்திக் கண்ணன், முன்னிலை வசித்தார். மக்கள் இயக்க நிர்வாகி வெங்கட்ராமன் மூ.கு.கிருஷ்ணமூர்த்தி, தேவராஜன், சினிமா துணை இயக்குநர். மற்றும் முனுசாமி வரதன் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் சுமார் 300க்கும் மேற்பட்ட பள்ளிமாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் ஆசிரியர்கள் போர்வீரர் நினைவு ஸ்தூபிக்கு புஷ்பாஞ்சலி செலுத்தினர்.
மாதர் சங்கத்தின் 53 ஆம் ஆண்டு விழா

குரோம்பேட்டை நியூ காலனி ஸ்ரீ வித்யா மாதர் சங்கத்தின் 53 ஆம் ஆண்டு விழா லட்சுமி அம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. டாக்டர் மீனா கபிலன் தலைமையேற்று சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார். விழா ஏற்பாடுகளை மாதர் சங்கத் தலைவி திருமதி ரமா சம்பத் துணைத் தலைவி திருமதி மல்லிகா பாலகுரு செயலாளர்கள் சாந்தா கிருஷ்ணன் சுமதி ராமச்சந்திரன் பொருளாளர் சரோஜினி முத்துகிருஷ்ணன் அரங்க ஜோதி மற்றும் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
மாதர் சங்கத்தின் 53 ஆம் ஆண்டு விழா
குரோம்பேட்டை நியூ காலனி ஸ்ரீ வித்யா மாதர் சங்கத்தின் 53 ஆம் ஆண்டு விழா வருகிற ஜூலை மாதம் 13ஆம் தேதி நடைபெறுகிறது. லட்சுமி அம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் மாலை 4 மணி அளவில் விழா நடத்தப்படுகிறது. டாக்டர் மீனா கபிலன் தலைமையேற்று சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்குகிறார். விழா ஏற்பாடுகளை மாத சங்கத் தலைவி திருமதி ரமா சம்பத் துணைத் தலைவி திருமதி மல்லிகா பாலகுரு செயலாளர்கள் சாந்தா கிருஷ்ணன் சுமதி ராமச்சந்திரன் பொருளாளர் சரோஜினி […]
குரோம்பேட்டை நவபாரத் பள்ளியில் 21 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது

நான் முதல்வன் திட்ட ஆலோசகர் டி.கலைசெல்வன்டி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். பங்கேற்பாளர்களைப் பாராட்டி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.மாணவர்கள் நடனம், நாடகம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சி மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்தனர். மாண்டிசேரி ஆசிரியர் பயிற்சி பட்டம் வழங்கபட்டது.
சிட்லபாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன், ரோட்டரி சங்கம், அரிமா சங்கம் மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் குழுவினர் இணைந்து இந்த விழாவை நடத்தினார்

காலையில் விளையாட்டுப் போட்டிகளும் நடந்தன. விழாவில் சிட்லபாக்கம் சி.ஜெகனை வாழ்த்தி கௌரவித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குடிநீர் வழங்கல் துறை இயக்குனர் சரவணன் சிறப்புரையாற்றினார். தலைமை ஆசிரியர் வில்லியம், முன்னாள் மாணவர் எல்.என்.ரகுராஜ் வழக்கறிஞர், சிவகுமார், ரோட்டரி கலை கோவிந்தராஜ், ரோட்டரி முத்துசாமி, பிரதாப், ஜீவா எஸ்எம்சி தலைவர், சொக்கலிங்கம், சுகுணா, எஸ்எம்சி உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் விழாவில் பங்கேற்றனர்.
வேளச்சேரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் மையத்தின் முப்பதாம் ஆண்டுவிழா சென்னையில் நடைபெற்றது

இதில் அந்த மையத்தின் நிறுவனர் கே.பாபு, தலைமை செயல் இயக்குனர், மீரா பாபு, மேலாண் நிர்வாகி ஹேமந்த் குமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி சோமு, முட நீக்கியல் சிறப்பு மருந்துவர் சரத் மோகன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெங்கடேஷ்வரா மருத்துவ பரிசோதனை மையத்தின் சேவைகளை பாராட்டி பேசினார்.