அரசு பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவு பெற்று நான்காம் ஆண்டில் வைப்பதையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை,

மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில், மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் உள்ளனர்.