“மக்களை ஏமாற்றுவதை எப்போது நிறுத்தும் திமுக?” – அண்ணாமலை

தமிழக முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள், ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற ஒரு திட்டம் கொண்டு வந்திருப்பதாகக் கூறியிருக்கிறார். குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை உறுதி செய்ய வேண்டுமானால், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.மோடி அவர்கள் ஏற்கனவே கடந்த ஏழு ஆண்டுகளாகச் செயல்படுத்தி வரும் போஷான் அபியான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை, ஒழுங்காகப் பயன்படுத்தினாலே போதுமானது. புதியதாகப் பெயர் வைப்பதால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைத்து விடாது என்பதை தமிழக முதல்வர் உணர வேண்டும். மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி […]
2026ல் மதுரை எய்ம்ஸ் திறப்பு ; அண்ணாமலை

தமிழ்நாட்டின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்து இன்று வரை கட்டவில்லை. இந்நிலையில், “2026 மே மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். ரூ.2,600 கோடி செலவில் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சுதந்திரம் வேண்டாம் என மறுத்த இயக்க தலைவருக்கு சுதந்திர தினத்தில் விருது

தமிழை காட்டுமிராண்டிகளின் மொழி என்று சொன்ன இயக்கத் தலைவருக்கு விருது, திருக்குறளை மலம் என்று விமர்சனம் செய்பவருக்கு தகைசால் தமிழர் விருது. என்ன கூத்து? கீ.வீரமணிக்கு அறிவிக்கப்பட்ட விருது பற்றி அண்ணாமலை ஆதங்கம் ஆட்சியின் அவலங்களையும், அதிகார மீறல்களையும், அடிக்கும் கொள்ளைகளையும் மறைப்பதற்காக தகைசால் தமிழர் விருதை இந்த வருடம் கி.வீரமணிக்கு கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இப்படி கொடுப்பதன் வாயிலாக, கடந்த ஆண்டு இப்பரிசைப் பெற்ற அப்பழுக்கற்ற அரசியல் பிதாமகர் நல்லக்கண்ணுவை அவமானப்படுத்துகின்றனர். சுதந்திரம் வேண்டாம் என மறுத்த […]
அண்ணாமலைக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் கேள்வி

ஆலந்தூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 60 அணிகள் கலந்துக்கொண்ட கிரிகெட் போட்டியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்து அவர்களுக்கு கிரிகெட் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர் அன்பரசன்:- மணிப்பூர் கலவரம் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் நாட்டில் எங்கும் சிறுபான்மையினர் நிம்மதியாக வாழமுடியாத சூழல் உள்ளது. ராமேஸ்வரத்தில் பாஜக நடத்தும் 9 ஆண்டுகால சாதனையில் 15லட்சம் வழங்கியது. 18 கோடி இளைஞர்களுக்கு வேலை, ஜி.எஸ்.டி வரி அமுல் செய்து மாநில அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படுத்துவது […]
அண்ணாமலை பாத யாத்திரை: ராமநாத புரத்திற்கு அமித்ஷா வந்தது ஏன்?

தமிழ்நாட்டில் எப்படியாவது வேரூன்றி கிளை பரப்ப திட்டமிட்டு பாரதிய ஜனதா செயல்பட்டு வருகிறது. அதற்கான மற்றும் ஒரு நிகழ்ச்சி தான் அண்ணாமலை நடத்தும் பாதயாத்திரை. இதை தவறாக கருதக் கூடாது.ஏற்கனவே வேல் யாத்திரை நடத்திய முருகன் மத்திய மந்திரியாகி விட்டார். அண்ணாமலைக்கு எந்த பதவி காத்திருக்கிறதோ தெரியவில்லை .அதே சமயம் ஏன் ராமநாதபுரத்தை தேர்ந்தெடுத்தார்கள். இத்தனைக்கும் அங்கு அதிமுகவினர் உதவி இல்லாமல் அங்கு யாரும் ஜெயிக்க முடியாது என்று கூட கே.பி .முனுசாமி சமீபத்தில் கூட கூறியிருந்தார்.ஆனால் […]
தமிழகம் அதிமுக – பா.ஜ.க. கூட்டணியில் விரிசல்!: நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு அண்ணாமலை விடுத்த அழைப்பை நிராகரித்தார் எடப்பாடி பழனிசாமி..!!

சென்னை: நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு அண்ணாமலை விடுத்த அழைப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார். நாளை ராமேஸ்வரத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணத்தை தொடங்குகிறார். அண்ணாமலை நடைபயணத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார். இந்தப் பயணத் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்திருக்கிறார். அதன்படி, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அண்ணாமலை தொலைபேசி மூலம் தொடர்பு […]
திமுகவினரை கிண்டலடித்த அண்ணாமலை

திமுக அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, ராஜகண்ணப்பன், உதயநிதி என பலர் கருப்பு பணம் வைத்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர், “இந்தியாவில் கருப்பு பணம் பதுக்கியவர்களில் அதிகமானோர் திமுகவினர்தான், இதுகுறித்து நடவடிக்கை எடுத்தால் நெஞ்சுவலி என அவர்கள் மருத்துவமனையில் படுத்துக் கொள்வர்” என கிண்டலடித்துள்ளார்.
திமுக எம்.பி டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்.
நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே முகவரியில் எப்படி இயங்குகிறது? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தினமும் ரூ.15 லட்சம்… ரூ.15 லட்சம் என்று சொல்லாத ஒன்றை சொல்லி புலம்பி வருவதாக அறிகிறேன். ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில், ரூ.30 ஆயிரம் கோடி கொள்ளை அடித்த பெருமை வாய்ந்த திமுகவின் வாரிசுக்கு ஒரு கேள்வி. இந்த கேள்விக்கு அவர் சிரித்து மழுப்பாமல் பதில் சொல்ல வேண்டும். ரூ.1000 கோடி ஊழலுக்கு பேர் போன, துபாய் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் குழும நிறுவனமான, நோபல் ப்ரிக்ஸ் […]
கொட்டும் மழையில் நின்று பேசிய அண்ணாமலை

மயிலாடுதுறையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, “மயிலாடுதுறை மண்ணின் பெருமையை செங்கோல் மூலமாக பிரதமர் இந்தியா முழுவதும் எடுத்துச் சென்றுள்ளார். வரும் பொதுத்தேர்தலில் பாஜக வென்றுவிட்டால், 2026 தேர்தலில் தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சி அமைக்கும்” என மழையில் நனைந்தபடி பேசினார்.