உங்களால் நிறுத்த முடிந்தது மின்சாரத்தை மட்டும் தான்! -அண்ணாமலை

வையத்தலைமை கொள்ளும் பாரதம் ‘ஜி – 20’ மாநாட்டின் தலைமைக்கான கருப்பொருளாக முன்வைப்பது, ‘வசுதைவ குடும்பகம்’ என்ற வாசகத்தை. இதன் பொருள், – ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான, உலகளாவிய செயல் திட்டத்தை முன்னெடுக்கும் நம் பாரதத்தின் முயற்சி, ‘ஜி – 20’ உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து தலைவர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்த மாநாடு துவங்கப்படும் வேளையில், இந்தியாவை உலகத்தின் தலைமைக்கு உயர்த்தி இருக்கும் பிரதமர் மோடியின் பெருமைகளையும், […]

அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அரசு தவறி விட்டது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். என் மண், என் மக்கள் பாதயாத்திரையின் ஒரு பகுதியாக, தேனி மாவட்டம், கம்பம் தொகுதியில் அவர் நேற்று நடைப்பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் அண்ணாமலை பேசுகையில், முல்லைப் பெரியாறு, கண்ணகி கோயில் ஆகிய விவகாரங்களில், தமிழகத்தின் உரிமையை திமுக அரசு விட்டுக்கொடுத்து உள்ளது என்று குற்றம் சாட்டினார். கூட்டணியில் இருப்பதால், தமிழக- கேரள […]

“சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை உதயநிதி ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்;

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆண்டாள் கோயிலில் 30 பிரசுரங்களை படித்துள்ளார், இதுவும் ஒரு வகையான சனாதன தர்மம் தான்; இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் அரவணைத்து செல்லக்கூடியது சனாதன தர்மம்; உதயநிதிக்கு ஒரு சவால் விடுகிறேன், 2024 மற்றும் 2026 தேர்தல்களை சனாதன தேர்தல்களாக வைத்துக் கொள்ளலாமா?; திமுக சனாதனத்தை ஒழிப்போம் என தேர்தலில் பிரச்சாரம் செய்யட்டும், பாஜக சனாதனத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும், மக்கள் யாருக்கு ஓட்டு போடுவார்கள் என பார்க்கலாம்”

நான் பேசியதில் தவறு இல்லாத போது அமைச்சர் சேகர் பாபு எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும்;

சனாதனத்தில் பெண்கள் அடிமையாக வைக்கப்பட்டு இருந்தார்கள்; கணவன் இறந்தால் உடன்கட்டை ஏற வேண்டும், வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் பெண்களுக்கு இருந்தது; திராவிட மாடலால் தான் அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது; காலை உணவு திட்டம், பெண்களுக்கான புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் ஆட்சி கொண்டு வந்துள்ளது”

தமிழகத்தை பற்றி பேசுங்க முதல்வரே! – அண்ணாமலை

தூத்துக்குடி மாவட்டம் விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் கூலிப்படை தாக்கம் அதிகரித்துவிட்டது. குடி பழக்கம் அதிகரித்து விட்டது. இதை எல்லாம் அரசு கவனம் கொள்ள வேண்டும். இதை எல்லாம் கவனம் செலுத்தாமல், இந்தியா பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். எப்போதுமே நாம் சொல்லுவோம் உள் வீட்டு பிரச்னையை பேசினால் தான் பிரச்னை தீரும். நாட்டில் நிறைய பிரச்னை இருக்கிறது. தமிழகத்தில் கஞ்சா, குடி, அரிவாள் கலாசாரம் என எத்தனை பிரச்னை இருக்கிறது. இதை […]

தி.மு.க., இனி தப்பிக்கவே முடியாது!

–  அண்ணாமலை. தமிழக பாஜக தலைவர். பாதயாத்திரையாக, 21 நாட்களை வெற்றிகரமாக முடித்து, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதிகளுக்கு சென்றேன். மாநாட்டிற்கு இணையாக திரண்ட மக்கள் கூட்டத்தின் அன்பு பெருக்கிலே, முற்றிலுமாக கரைந்து போனேன். வீரத்தின் விளை நிலமாம், நெல்லை மண்ணுக்கு, எப்போது வந்தாலும் உற்சாகம் உடைப்பெடுக்கும். கடந்தாண்டு ஜூன் 5ல், நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தில், பிரதமர் மோடியின், 8ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசியதை மறக்க முடியாது. சுதந்திர போராட்டத்தின் போது, திருநெல்வேலி கலெக்டராக இருந்த […]

பிரதமர் மோடியை விமர்சிக்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை. பி.ஜே.பி தலைவர் அண்ணாமலை காட்டம்

மணிப்பூர் உக்ரூல் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் குக்கி இளைஞர்கள்3 பேர் உயிரிழப்பு. மணிப்பூர் உக்ரூல் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் குக்கி இளைஞர்கள் 3பேர் உயிரிழந்தனர். தவாய் கிராமத்தில் நிகழ்ந்த வன்முறையில் தன்னார்வலர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். மணிப்பூர் கலவரத்தில் மே 3ஆம் தேதி முதல் இதுவரை 190 பேர் கொல்லப்பட்டதாக அம்மாநில காவல்துறை தகவல் அளித்துள்ளது.

வாழைப்பழம், நெல் போன்றவற்றுக்கு குறைந்த ஆதார விலை வழங்குவதாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது

ஆனால், அதை நிறைவேற்றவில்லை. பிரிவினை பேசியவர்கள் எல்லாம் I.N.D.I.A என்ற கூட்டணியில் சேர்ந்துள்ளனர். 2024 நாடாளுமன்ற தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல, சாதாரண மக்களுக்கும் அதிகார பதவியை தவறாக பயன்படுத்துபவர்களுக்கும் இடையே நடக்கும் தேர்தல். -கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உரை.