கிறிஸ்தவ தேவாலயத்தில் அண்ணாமலைக்கு கடும் எதிர்ப்பு

தருமபுரியில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கிறிஸ்தவ தேவாலயத்தில் அன்னையின் உருவ சிலைக்கு மாலை அணிவிக்க அப்பகுதி இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பசிப்பிணி போக்கிய மாமனிதர் விஜயகாந்த்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம்

பசிப்பிணி போக்கிய மாமனிதர் விஜயகாந்த் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் செய்துள்ளார். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர். தன்னலமற்ற தலைவர்; தமிழ்மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர்; கொடுத்துச் சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் என்று தெரிவித்தார்.
மத்திய சிறையில் தனி கட்டிடம் தேவைப்படும்: அண்ணாமலை கருத்து

மக்களின் வரிப் பணத்தை விஞ்ஞானப்பூர்வமாக மோசடி செய்யும் கலையில் பட்டம் பெற்றுள்ள ஊழலின் ஊற்று, இன்று உடைந்து நொறுங்கியிருக்கிறது. ஏற்கனவே ஒரு அமைச்சர் திரு செந்தில் பாலாஜி சிறையில் இருக்கையில், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்புக்கு பின், மற்றொரு அமைச்சர் திரு பொன்முடி, அவருடன் சிறையில் இணைகிறார். திமுக அமைச்சர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள எண்ணற்ற ஊழல் வழக்குகளைக் கணக்கில் கொள்ளும்போது, மத்திய சிறையில், திரு @mkstalin அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் […]
முதல்வர் தென் தமிழகத்தில் இருந்திருக்க வேண்டும்

இந்தநேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்க வேண்டிய இடம் தென் தமிழகம். ஆனால், முதல்வர் I.N.D.I.A கூட்டணி கூட்டத்திற்காக டெல்லி சென்றுள்ளார். ஹெலிகாப்டரில் இருந்து மீட்புப்படை வரை இங்கு வேலை செய்கிறார்கள். முதலமைச்சர் எங்கு சென்றார்- நெல்லையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
“தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புதிய பொதுச்செயலாளராக பதவி ஏற்றிருக்கும் அன்பு சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

தங்களின் கட்சிப்பணி சிறக்கவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்”- எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர். தேமுதிக பொதுச் செயலாளராக, சகோதரி பிரேமலதா விஜயகாந்த் பொறுப்பேற்றுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பக்கபலமாக, இத்தனை ஆண்டுகள் மக்கள் பணிகளை மேற்கொண்டு வந்த சகோதரி, தமது புதிய பொறுப்பில் சிறப்பாகச் செயல்படுவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தேமுதிகவை பல படிகள் முன்கொண்டு செல்ல, பாஜக சார்பாக வாழ்த்துகள்- பாஜக மாநிலத்தலைவர் […]
கருணாநிதி பணிபுரிந்த இடங்களில் எல்லாம் அவரது சிலை வைக்க ஆசைப்படலாமா.?

– அண்ணாமலைதமிழக பாஜக தலைவர் ‘சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம்’, மறைந்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா உட்பட பலர் புகழ்பெற காரணமாக இருந்தது. அதன் நிறுவனரான மறைந்த டி.ஆர்.சுந்தரம், திரையுலகின் முன்னோடிகளில் ஒருவர். மேற்சொன்ன தலைவர்கள் அனைவராலும், ‘முதலாளி’ என்று அன்புடன் அழைக்கப்பட்டவர்.பாரம்பரியமிக்க மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தின் நினைவாக, சேலம் ஏற்காடு சாலையில், நினைவு வளைவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில், முதல்வர் ஸ்டாலின் அந்த வளைவு முன் நின்று புகைப்படமும் எடுத்தது, சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. […]
மிக்ஜாம் புயல் நிவாரணம், மத்திய அரசு வழங்கியுள்ள நிலையில், மாநில அரசின் பங்கு ஒன்றுமில்லாதது ஏமாற்றத்துக்குள்ளாக்குகிறது: பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை…

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியாக, ரூபாய் 10,000 வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், வெறும் 6,000 ரூபாய் மட்டுமே நிவாரண நிதியாக அறிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, பேரிடர் மேலாண்மை நிதியாக, தமிழக அரசுக்கு ரூபாய் 450 கோடி வீதம் இரண்டு தவணைகளில், ரூபாய் 900 கோடி நிதி வழங்கியுள்ளது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிவாரண […]
தமிழ்நாடு அரசின் நிர்வாகம் முடங்கி போய் உள்ளது

சட்ட மசோதாக்களின் நிலை குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உச்சநீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். தவறான மசோதாக்களை தமிழ்நாடு அரசு அனுப்புகிறது. அரசியலில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பது தான் என் நோக்கம்- மதுரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
தி.மு.க., அரசு பயப்படுகிறதா? அண்ணாமலை கேள்வி

தங்கள் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக வேண்டும் என்றே அரசுக்கு ஏற்படுத்திய இழப்பு அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம் ஆகிவிடும் என்று ஊழல் தி.மு.க., அரசு பயப்படுகிறதா என தமிழக பா.ஜக., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக தமிழக பா.ஜக., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மடியில் கனம் இருப்பவர்கள் பயப்படத்தான் வேண்டும். ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் தி.மு.க., அரசின் இந்த கோழைத்தனமான நடவடிக்கை, ஆட்சிக்கு வந்த நாள் முதல் நமது மாநிலத்தின் வளங்களை சுரண்டிய […]
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஸ்ரீரங்கம் கோயிலின் முன்பாக வைக்கப்பட்டுள்ள “கடவுளை நம்புபவன் முட்டாள்” எனும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ள பலகை மற்றும் கம்பத்தை அகற்றுவதே முதல் கையெழுத்தாக இருக்கும் – அண்ணாமலை

இந்து சமய அறநிலையத் துறை எனும் துறையே பாஜக ஆட்சிக்கு வந்தால் இருக்காது. முகலாயர்களால் ஒழிக்க முடியாத சனாதன தர்மத்தை திமுகவால் மட்டும் எப்படி ஒழிக்க முடியும். திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ நடைபயண 100-வது தொகுதி நிகழ்வில் அண்ணாமலை பேச்சு.