டிடிவி தினகரனுடன் அண்ணாமலை சந்திப்பு
பாதுகாப்பு வாகனங்களை தவிர்த்துவிட்டு, மாற்றுக் காரில் அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு அண்ணாமலை வந்தார். அங்கு டிடிவி தினகரனுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சந்திப்பின்போது, கூட்டணியில் தொடர்ந்து இருக்குமாறு தினகரனை அண்ணாமலை கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
அண்ணாமலை தனிக்கட்சியா ?
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி வருமாறு:-தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிராக யாரும் பேசினால் அவரை பாஜகவின் பி டீம் என்று திமுக சொல்கிறது. ரஜினியை நான் அடிக்கடி சந்தித்து வருகிறேன், நட்பு அடிப்படையிலேயே அவரை சந்திக்கிறேன். எனவே அவரை அரசியலுக்குள் இழுக்க வேண்டாம். முதலில் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு வரிகள் இருந்தன. இதனால் முதன் முறையாக ஜிஎஸ்டியை கொண்டுவந்தபோது 4 அடுக்கு தேவைப்பட்டது. இப்போது அதனை இரு அடுக்குகளாக குறைத்துள்ளோம்” என்றார். நீங்கள் தனிக்கட்சி ஆரம்பிக்க […]
.அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு
தமிழக பாராளுமன்ற கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது அப்போது தேர்தலை சந்திக்க 5 புதிய குழுக்களை தேசிய பொதுச்செயலாளர் சந்தோசம் அமைத்தார் இதில் ஒரு குழு தமிழக அரசியல் நடப்பு சூழலை மக்களிடம் கொண்டு செல்வது குறித்த குழுவாகும் இதற்கு அண்ணாமலை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதுபோல தமிழிசை, வானதி சீனிவாசன், எச் ராஜா போன்றவர்களுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது
அண்ணாமலைக்கு காய்ச்சல்
சென்னையில் இருந்து தமிழ்நாடு பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது இந்த கூட்டத்தில் பூத் கமிட்டி ஒலித்து ஆலோசனையும் பயிற்சியும் நடைபெற உள்ளது இந்த கூட்டத்தில் அனைத்து மூத்த தலைவர்களும் பங்கே இருக்கிறார்கள் பங்கேற்கிறார்கள் ஆனால் அண்ணாமலை இந்த கூட்டத்திற்கு வரவில்லை. தனக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாகவும் மதியத்திற்கு மேல் கலந்து கொள்வதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
அண்ணாமலை போல் நயினார் இல்லை -தினகரன் புகார்
கூட்டணியை நயினார் நாகேந்திரன் சரியாக வழிநடத்தவில்லை .அண்ணாமலை இருந்தபோது எங்களுக்கு உரிய மதிப்பு கொடுத்தார் என தினகரன் குற்றம்சாட்டியிருந்தார்.இதுபற்றி நைனார் நாகேந்திரன் கூறும் போது தினகரன் ஏன் அப்படி சொன்னார் என தெரியாது என நயினார் விளக்கம் அளித்துள்ளார். பாஜகவை பொறுத்தவரையில் அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் எனவும், எந்த கட்சியையும் சிறிய கட்சி என நினைக்கவில்லை எனவும் கூறியுள்ளார். கூட்டணியில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் சேர வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்தார்.
OPS, TTV க்கு அண்ணாமலைவேண்டுகோள்
பாஜக கூட்டணியில் இருந்து விலகல் என்ற முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்.
ஸ்டாலின் ஜெர்மனி பயணம் குறித்து அண்ணாமலை கிண்டல்
அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ஜெர்மனி நாட்டுக்குச் சுற்றுலா சென்றிருக்கும் முதலமைச்சர் @mkstalin கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறை நூலகத்தைப் பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பல்கலைக்கழக தமிழ்த் துறை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே மூடப்பட்டதாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன. சூரியன் திரைப்படத்தில், அண்ணன் திரு. கவுண்டமணி அவர்களின், “போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு” என்ற நகைச்சுவைக் காட்சி, மிகவும் புகழ்பெற்றது. முதலமைச்சரின் நகைச்சுவை நாடகங்கள், அதற்குச் சிறிதும் குறைந்ததல்ல. […]
அண்ணாமலை வார் ரூம் கலைப்பு
தன்னையும் பாஜக-வையும் விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக கோவையில் பிரத்யேக வார் ரூம் ஒன்றை வைத்திருந்தார் அண்ணாமலை. வார் ரூம் மூலமாக அண்ணாமலை தன்னை பிரதானப்படுத்திக் கொள்வதாக குற்றச்சாட்டுகள் கூட கிளம்பின. தலைவர் பதவியை இழந்த பிறகு அந்த வார் ரூமின் செயல்பாடுகளை சுருக்கியவர், தற்போது அதைக் கலைத்து பெங்களூருவுக்கும் டெல்லிக்கும் இரண்டு பிரிவாக மாற்றிவிட்டதாகச் சொல்கிறார்கள். மறு உத்தரவு வரும் வரை வேறு வேலைகள் கிடைத்தால் பார்க்கும்படி கோவை வார் ரூம் ஆட்களை அண்ணாமலை அறிவுறுத்தி இருப்பதாகச் […]
தலைவர் பதவி ஒரு வெங்காயம் – அண்ணாமலை
“ நான் சாதாரண ஆள்.. மாநில தலைவர் பதவி ஒரு வெங்காய பதவி..! என் ஆடு, மாடு, கிரிக்கெட்டுனு நான் போய்ட்டு இருக்கேன்..! ” இந்த கூட்டணியை நான் எங்கு உடைக்க பார்த்தேன்..? ஆட்சியில் பங்கு என்று நான் சொன்னேனா..? செய்தியாளர்களின் கேள்விக்கு அண்ணாமலை பதில்..
தமிழகத்தில் இனி ஆன்மிக ஆட்சிதான் – அண்ணாமலை
தமிழகத்தில் இனி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஆன்மிக ஆட்சிதான் அமையும் என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.