அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சஸ்பெண்ட்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பதவிகாலம் முடிந்த பின்னரும் தொடர்ந்து பேராசிரியராக பணியாற்றி வந்த வேல்ராஜ், இன்றுடன் பணி ஓய்வு பெற்ற நிலையில் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் கனிமொழிக்கு முக்கியத்துவம்?
அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொடுக்கப்பட்டது போல் கனிமொழிக்கும் தனியறை வழங்கப்பட்டு உள்ளது. திமுக உயர்மட்ட பொறுப்பில் சில மாற்றம் செய்யப்படுவதாக செய்தி பரவி வரும் நிலையில் அண்ணா அறிவாலயத்தில் புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள அலுவலக அறையில் கனிமொழி கருணாநிதி எம்.பி-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர வைத்துள்ளார்
அண்ணா பல்கலை வழக்கு
அண்ணாமலை வெளியிட்ட புதிய ஆதாரங்கள்அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளி ஞானசேகருக்கு 30 வருட ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது இருந்தாலும் அதில் மேலும் பலர் உள்ளதாக அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன இதற்காக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் அண்ணா பல்கலையில் பாலியல் வன்கொடுமை நடந்த, டிச.,23 இரவு 8.55 மணிக்கு ஞானசேகரன் ஒரு போலீஸ் அதிகாரிக்கு போன் செய்கிறார். அந்த அதிகாரி 6 நிமிடம் கழித்து […]
தீர்ப்பு வந்த பிறகும் மறக்கப்படாத சார்.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய சார் ஒருவர் மறைக்கப்படுகிறார் என்றும், அவரையும் வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இதே போல் ஒரத்தநாட்டு வழக்கிலும் விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஆனால் இந்த வழக்கில் வேறு யாரும் கிடையாது ஞானசேகரன் சார் என்று யாரையும் குறிப்பிட்டு சொன்னது தன்னை காப்பாற்றிக் கொள்ளவே என்று […]
அண்ணா பல்கலை. வழக்குஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை
அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதான ஞானசேகரன் குற்றவாளி என மகளிர் போற்றி ஏற்கனவே அறிவித்தது. இன்று அந்த தீர்ப்பில் தண்டனையும் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஞானசேகருக்கு 30 ஆண்டுக்கும் குறையாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
ஞானசேகரன் குற்றவாளி: அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு
குற்றவாளி ஞானசேகரன்சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி தீர்ப்பளித்துள்ளார். தண்டனை விவரம் ஜூன் 2-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார். இந்த வழக்கில் ஞானசேகரன் மீது 11 பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது. அத்தனை குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதாக அறிவித்த நீதிபதி, ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த வழங்கில் 5 மாதங்களில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் என்ற நபர், ஏற்கனவே இது போன்ற குற்றங்களில் பல முறை ஈடுபட்டவர் என்பதும், அவர் திமுகவின், சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் முழுவதும், இதுபோன்ற குற்ற வழக்குகளில் இருந்து ஒரு தெளிவான திட்டம் புலப்படுகிறது. தொடர்ந்து தமிழகமெங்கும் நடைபெறும் குற்றங்களில், குற்றவாளிகள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்றால், ஆளுங்கட்சி நிர்வாகிகள் அழுத்தத்தால், காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே. தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக, 15 வழக்குகள் உள்ள ஒருவரை, இத்தனை நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவைத்ததால்தான், இன்று ஒரு அப்பாவி மாணவிக்கு இந்தக் கொடூரம் நடைபெற்றிருக்கிறது. இதற்கு முழுக்க முழுக்க திமுக […]