வயநாடு நிலச்சரிவில் பலியானவர்களுக்கு மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் குரோம்பேட்டை பஸ் நிலையம் அருகே மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செய்யப்பட்டது

சமூக சேவகர் வி.சந்தானம் தலைமை ஏற்றார். மீனாட்சிசுந்தரம், அட்வகேட் ராமதாஸ், ராமசுப்பு, மோகன், ராமகிருஷ்ணன், பழனி, சேது, தேவராஜ் கிருஷ்ணமூர்த்தி, தன்ராஜ், சிராஜ் ஆகியோர் பங்கேற்றார்கள்.
மறைந்த கேப்டன் விஜயகாந்திற்கு நினைவேந்தல் கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில், வரும் 19ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு
அஞ்சலி செலுத்த வரும் பக்தர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு அன்னதானம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இட்லி, தோசை, பொங்கல் என பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து அன்னதானத்தை பெற்று உணவருந்தும் பக்தர்கள்…
உடல்நலக் குறைவால் காலமான சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சாமிதுரை அவரது உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலக் குறைவால் காலமான சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சாமிதுரை இல்லத்திற்கு (31.08.2023) நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது மகனும், கேரள உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான எஸ்.மணிக்குமார் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உடன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பெருநகர சென்னை மாநகராட்சியின் நிலைக்குழு தலைவர் (பணிகள்) சிற்றரசு ஆகியோர் உள்ளனர்.
தாம்பரத்தில் கருணாநிதி நினைவுநாள் தி.மு.க அஞ்சலி

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 5 ம் ஆண்டு நினைவு நாளையொட்டி தாம்பரம் சண்முகம் சாலையில் அமைக்கப்பட்ட கலைஞரின் திரு உருவ படத்திற்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் திமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் கலைஞருக்கு வீரவணக்கம் கோஷமிட்டனர். மண்டல குழு தலைவர்கள் காமராஜ், இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் ஜோதிகுமார், ரமணி ஆதிமுலம், டி.ஆர்.கோபி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரில் கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உடலுக்கு அஞ்சலி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18.7.2023) பெங்களூரில், உடல்நலக் குறைவால் காலமான கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் உள்ளனர்.