வண்டலூர் வந்த புதிய குரங்குகள், ஆந்தைகள், கழுகுகள்

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் உயிரியல் பூங்கா இடையே விலங்கு பரிமாற்றம் செய்யபட்டுள்ளது. இந்திய மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஆகஸ்ட் 2023 இல் வண்டலூர் அடுத்த அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கும் கான்பூர் உயிரியல் பூங்காவிற்கும் இடையே பூங்கா விலங்குகளை பரிமாறிக்கொள்ள முன்மொழியப்பட்டது. அதன்படி, பத்து அனுமன் குரங்குகள், ஐந்து மர ஆந்தைகள், ஒரு ஜோடி ஹிமாலயன் கிரிஃபோன் கழுகு மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் […]
கோவை, விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்கள் பறிமுதல் – 2 பேர் கைது

அதிகாரிகள் நடத்திய சோதனையில் மலைபாம்பு, ஆமை, சிலந்தி, ஓணான் உள்ளிட்டவை பறிமுதல் நவ.7ம் தேதி சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகள் 3 பேர் விட்டு சென்ற பெட்டியில் நடத்திய சோதனையில் கண்டெடுப்பு
வெப்பத்தில் இருந்து தப்பிக்கும் விலங்குகள்

அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவுவதால், மனிதர்களைப் போலவே விலங்குகளும் தங்களுடைய உடல்களை பாதுகாக்க புதிய முறையைப் பின்பற்றுகின்றன. கை கால்களை நன்றாக விரித்து, தரையில் உடலைப் பரப்பி படுப்பதன் மூலம் வெப்பத்தில் இருந்து தற்காத்துக் கொள்கின்றன. இதை விஞ்ஞானிகள் ‘ஸ்பூட்டிங்’ என்று வர்ணிக்கிறார்கள்.
செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடும்போது ரத்த அழுத்தம் குறைகிறது

செல்லப் பிராணிகளுடன் நேரத்தை செலவிடும்போது ரத்த அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும் கார்டிசோல் எனும் தீங்கு விளைவிக்கும் ஹார்மோன் குறைந்து, ஆக்சிடோசின் எனும் மகிழ்ச்சிக்கான ஹார்மோன் அதிகமாக சுரப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இதய நோய் மற்றும் பக்கவாதத்தால் ஒவ்வொரு ஆண்டும் பல பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். செல்லப்பிராணிகள் வளர்ப்பு, குறிப்பாக நாய்கள் வளர்ப்பது ரத்தத்தில் கொலஸ்டிரால் மற்றும் டிரை கிளிசரைடு அளவுகளைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.செல்லப்பிராணியை பராமரிப்பதும், குழந்தையைப் பராமரிப்பதும் கிட்டத்தட்ட ஒன்றாகும். செல்லப்பிராணியை வளர்க்கும் நபர்களுக்கு […]
கிளி, பூனை, அணில் வீடுகளில் வளர்க்க கட்டுப்பாடு

சென்னை -வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் பட்டியலிடப்பட்ட கிளி, பூனை, அணில் உள்ளிட்ட உயிரினங்களை வீடுகளில் வளர்ப்பவர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு: வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின், 4வது அட்டவணையில், கிளிகள் உள்ளிட்ட பறவைகள், பூனைகள், அணில்கள், பாம்புகள், தவளை, ஆமைகள் சார்ந்த, 80 வகை உயிரினங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. இந்த உயிரினங்களை, வீடுகளில் வளர்ப்பதை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை, மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதன்படி, வீடுகளில் இந்த உயிரினங்களை வளர்த்தல், இனப்பெருக்கம் செய்தலில் […]