ஆந்திராவில் அதிகாரிகளின் அலட்சியத்தால் வாக்காளர் பட்டியலில் பெண் வாக்காளருக்கு பதிலாக முதல்வர் ஜெகன்மோகன் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் எர்ரகொண்டபாலம் தொகுதிக்கு உட்பட்ட செர்லோபள்ளி கிராமத்தின் வாக்காளர் பட்டியலில் முதல்வர் ஜெகன்மோகன் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அதுவும் குரவம்மா என்ற பெண்ணின் புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில் முதல்வர் ஜெகன்மோகன் புகைப்படம் உள்ளது.இந்த புகைப்படம் தெளிவாக தெரிந்தாலும், ஓட்டுச்சாவடி ஊழியர்கள் கவனிக்காமல் இருந்துள்ளனர். இந்த படம் இணையத்தில் பரவி வருகிறது. இது அவர்களின் அலட்சிய போக்கையே காட்டுகிறது. மறுபுறம் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி வரும் தெலுங்கு தேசம் கட்சி […]
ஆந்திர ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு – அவசர உதவி எண் அறிவிப்பு

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகபள்ளி ரயில் நிலையத்தில் அருகே 2 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த கோர ரயில் விபத்தில் 19 பேர் மரணமடைந்துள்ளார்; பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த ரயில் விபத்தில் சிக்கிக் கொண்டுள்ள தங்களின் உறவினர்களைப் பற்றி தெரிந்துகொள்ள இந்திய ரயில்வே அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது. BSNL 08912746330, 08912744619 Airtel – 8106053051, 8106053052 BSNL – 8500041670, 8500041671
ரயில் விபத்து : மத்திய- மாநில அரசுகள் நிவாரணம்

ஆந்திர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின்குடும்பத்திற்கு மாநில அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி.
ஆந்திர ரயில் விபத்து காரணமாக 3 ரயில்களின் சேவை முழுவதுமாக ரத்து

மேலும் 5 ரயில்கள் மாற்று திசையில் திருப்பி விடப்பட்டுள்ளன – ரயில்வே அதே தண்டவாளத்தில் காத்திருக்கும் 3 ரயில்களுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு விபத்தில் 32 பேர் படுகாயம், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி – மாவட்ட ஆட்சியர் நாகலட்சுமி
ஆந்திராவின் கண்டகப்பள்ளி அருகே 2 ரயில்கள் மோதி விபத்து நடைபெற்ற இடத்தின் தற்போதைய காட்சி…
ஆந்திரா, பீமாவரம் நகரில் தெலுங்கு தேசம் கட்சி பொதுச்செயலாளர் நாரா லோகேஷ் நடத்திய பேரணியில் மோதல்

தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் ஒய்.சி.பி. கட்சியினர் ஒருவரையொருவர் கற்களை வீசு தாக்கி கொண்டதால் பரபரப்பு. தாக்குதலில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் சிலர் காயம் – போலீசார் விசாரணை.
ஆந்திராவுக்கு லாரியில் கடத்த முயன்ற 50 டன் ரேசன் அரிசி பறிமுதல்

திருவள்ளூர்:சோழவரம் பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம், நகரிக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் இன்று காலை திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 2 லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அதில் 50 டன் ரேசன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. […]
ஆந்திராவில் இரு கட்சியினருக்கு இடையே நடந்த மோதலில் காவல்துறையினர் உட்பட பலர் காயம்

ஆந்திராவில் இரு கட்சியினருக்கு இடையே நடந்த மோதலில் காவல்துறையினர் உட்பட பலர் காயமடைந்தனர். ஆந்திர மாநிலம் பீமவரத்தில் தெலுங்கு தேச கட்சியின் நாரா லோகேஷின் பாதயாத்திரையின்போது மோதல் ஏற்பட்டுள்ளது. பீமாவரம் பகுதியில் நடந்த பாதயாத்திரையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் – தெலுங்கு தேச கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர்கள் இடையே மோதல்.

தொண்டர்கள் மோதல் காரணமாக தமிழகம் – ஆந்திரா இடையே போக்குவரத்து துண்டிப்பு. சித்தூர் மாவட்டத்தில் பந்த் நடைபெறுவதால் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்.
ஆந்திராவில் வெடித்த கலவரம்!

ஆந்திராவின் சித்தூரில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று பேரணி நடந்தது. அவர் மீது புங்கனூர் கிராமத்தில் உள்ள YSR காங்கிரஸ் கட்சியினர் கற்களை வீசினர். இதனால் ஆத்திரமடைந்த TDP கட்சியினர் வாகனங்களை அடித்து உடைத்து கலவரம் ஏற்படுத்தினர். இதனை எதிர்பாராத போலீசார் பல கட்ட போராட்டத்திற்கு பின்னர் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.