எஸ்ஐடி குழு நாளை திருப்பதி செல்கிறது

லட்டு பிரசாதம் கலப்படம் தொடர்பாக விசாரணை நடத்த ஆந்திர அரசு எஸ்ஐடியை நியமித்துள்ளது டிஐஜி சர்வ ஸ்ரேஸ்ட் திரிபாதி உள்ளிட்ட எஸ்ஐடி குழு நாளை திருப்பதி செல்கிறது முதல் ஏஆர் டைரியில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையை எஸ்ஐடி மேற்கொள்ளும் எஸ்ஐடி ஏற்கனவே டிஜிபியை சந்தித்து விசாரிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசித்துள்ளது
லட்டு விவகாரம்: நாளை முதல் 3 நாட்கள் திருப்பதியில் சாந்தி யாகம் நடத்துவது என்று ஆந்திராவில் முடிவு செய்யப்பட்டது

மேலும், லட்டு தயாரிப்புக்கூடம், நெய் இருப்பு வைத்துள்ள இடங்களையும் சுத்தப்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
“நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி”

நாளை மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் இது தொடர்ந்து மேற்கு, வட மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஒரிசா, வடக்கு ஆந்திரா கரையோரம் அதற்கு அடுத்த 2 நாள் நிலவக்கூடும்.
ஆந்திராவில் பாலாற்றில் தடுப்பணை கட்டினால் தடுப்போம் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் விக்ரவாண்டி செய்தியாளருக்கு பேட்டி:

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு எப்படி அணைக்கட்டும் என பார்ப்போம் அமைச்சர் துரைமுருகன். பாமகவுக்கு வன்முறையில் ஈடுபட தான் தெரியும் அதுதான் அவர்களது வேலை துரைமுருகன்.. பேட்டி:
ஆந்திர தலைநகர் அமராவதிதான்; இனி 3 தலைநகரங்கள் கிடையாது : சந்திரபாபு நாயுடு உறுதி

ஆந்திர தலைநகர் அமராவதிதான்; இனி 3 தலைநகரங்கள் கிடையாது என்று முதல்வராக பொறுப்பேற்க உள்ள சந்திரபாபு நாயுடு உறுதி அளித்துள்ளார். நாளை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள தெலுங்கு தேசம் கூட்டணி எம்எல்ஏக்களிடையே பேசிய அவர், “பொருளதார தலைநகராக விசாகப்பட்டினம் தரம் உயர்த்தப்படும்,”என்றார்.
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல்

ரெண்டல கிராமத்தில் வாக்குச்சாவடி அருகே ஒருவரையொருவர் கட்டையால் தாக்கி கொண்டதால் பரபரப்பு தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் ஏஜெண்டுகள் 2 பேரின் மண்டை உடைப்பு காயமடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதி மோதல் காரணமாக ரெண்டல கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸ் குவிப்பு
ஆந்திராவில் நடந்த ரயில் விபத்தில் 14 பேர் உயிரிழப்பிற்கு செல்போனில் கிரிக்கெட் பார்த்துகொண்டே ரயிலை இயக்கியது தான் காரணம்: ரயில்வே அமைச்சர் தகவல்
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளா காங்கிரசில் இணைய சந்திரபாபுவின் சதியே காரணம்.

ஆந்திர மாநில அரசின் ஆலோசகர் சஜ்ஜலா ராமகிருஷ்ணா நேற்று விஜயவாடாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது: முதல்வர் ஜெகன் மோகனை வழக்குகள் போட்டு துன்புறுத்தியது காங்கிரஸ் கட்சி. அதே கட்சியில் அவரது தங்கை ஷர்மிளா சேர்ந்துள்ளார்.ஒய்எஸ்ஆர் குடும்பத்திற்கு காங்கிரஸ் கட்சி பல பிரச்னைகளை ஏற்படுத்தியது மாநில மக்கள் அனைவருக்கும் தெரியும். இருப்பினும், ஷர்மிளா ஒரு கட்சியின் தலைவராக அவரது முடிவுகளை அவர் எடுத்துள்ளார். ஒய்.எஸ்.சர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்ததன் பின்னணியில் தெலுங்கு தேசம் கட்சி […]
ஆந்திராவில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய குழுவினர் இன்று ஆந்திரா செல்கின்றனர்.

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால் அங்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஒன்றியத்தில் தற்போதுள்ள மோடி தலைமையிலான பாஜ அரசின் பதவிக்காலம் வரும் ஜூன் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும். இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வௌியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணைய குழு களமிறங்கி உள்ளது. முந்தைய அறிவிப்பின்படி ஜன.7(நேற்று) முதல் […]