“சென்னை திருவொற்றியூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், போதைப் பாக்கு போட்டதை கண்டித்த ஆசிரியரை மாணவன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது;

ஆசிரியர்கள் கொண்டாடப்பட வேண்டிய ஆசிரியர் நாளில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை; தமிழக அரசு நினைத்தால் ஒரே ஆணையில் அனைத்து மதுக்கடைகளையும் மூட முடியும், சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் அனைத்து போதைப் பொருட்களையும் ஒரே நாளில் கட்டுப்படுத்த முடியும்; இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமுதாயத்தையும் காக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருப்பதால், அனைத்து வகையான போதைப் பொருட்களையும் முற்றிலுமான ஒழித்து தமிழ்நாட்டை போதையில்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க […]
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி, என்.எல்.சிக்கு ஒரு நீதியா?

ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டும் தமிழக அரசு,என்.எல்.சி சுரங்கங்கள் மற்றும் அனல் மின்நிலையங்களால் ஏற்படும் பேரழிவுகளை தடுக்க மறுப்பது ஏன்? ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகளை விட என்.எல்.சியால் ஏற்பட்ட பாதிப்புகள் ஆயிரம் மடங்கு அதிகம். ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஒரு நீதி… என்.எல்.சியால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் கடலூர் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு ஒரு நீதி என்பதே பெரும் அநீதி ஆகும். […]
சென்னையில் மாடு முட்டி பள்ளிக் குழந்தை படுகாயம்

“கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; பொதுமக்களின் குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சென்னையில் கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சியும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.
என்எல்சி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் அடிமையாகி விட்டார்.

சென்னையில் ‘வீராவேசம்’ செய்யும் அன்புமணி ராமதாஸ் டெல்லியில் மத்திய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்? என்எல்சி விரிவாக்க திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை என மத்திய அரசு அறிவித்தும், அன்புமணியின் மவுனம் ஏன்? தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லை என்று கூறிவிட்டு சென்னை வந்திருக்க வேண்டாமா? மக்களை தூண்டிவிட்டு அரசுக்கு எதிராக ஒரு சதித்திட்டத்தை உருவாக்கி வருகிறார் அன்புமணி ராமதாஸ்-அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை.
டாக்டர் அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பா.ம.க.வினர் சாலை மறியல்-ஆர்ப்பாட்டம்

நெய்வேலியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம்எடப்பாடி: டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடலூர் மாவட்டம், நெய்வேலி பகுதியில் என்.எல்.சி. நிறுவன விரிவாக்க பணிக்காக, நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுவதாக கோரி, இப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று என்.எல்.சி. நுழைவுவாயில் முன்பு மறியல் […]