சென்னை கடற்கரையில் விமானப்படை சாகசத்தைக் காண வந்த மக்களில் 5 பேர் சாவு: போதிய வசதிகளை செய்யாத தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்!

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை சென்னை கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியைக் காண வந்த மக்களில் 5 பேர் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்த நிலையில் அவர்களில் பெரும்பான்மையானோருக்கு நிகழ்விடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது; நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்றுள்ளனர். விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகளைக் […]
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி பண பலத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கிறது, இதற்காகவே 10 அமைச்சர்கள் இரவு பகல் முழுவதும் விக்கிரவாண்டியில் தங்கி இருக்கின்றனர்

சமூக நீதியை பற்றி பேச திமுகவிற்கு எந்த ஒரு தகுதியும் கிடையாது கலைஞர் திமுக வேறு ,மு க ஸ்டாலின் திமுக வேறு ,மு க ஸ்டாலினை இயக்குவது நான்கு அமைச்சர்கள் மட்டுமே, விக்கிரவாண்டி தொகுதி சமூக நீதி மண், இது எங்களின் மண், வேர்வை சிந்து பாட்டாளிகள்,விவசாயிகள் அனைவருமே எங்கள் பக்கம் இருக்கின்றனர் தேர்தல் வந்தாலே பாட்டாளி மக்களுக்கு நன்மை செய்தது போல் ஒரு சில அமைச்சர்களை வைத்துக் கொண்டு திமுக நடத்தும் நாடகம் இது […]
“சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம்” -பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டம்
“வானிலை ஆய்வு மையத்தை மூட வேண்டும்” “சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூட வேண்டும்” “காலநிலை மாற்றம் குறித்து நான் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறேன்”
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நிலவும் கடுமையான நிதிநெருக்கடி காரணமாக அங்கு பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம், அவர்களின் வாழ்விணையர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் ஆகியவை உரிய காலத்தில் வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் 400க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் என 1000 பேர் உள்ளனர். அவர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க மாதம் ரூ.10.50 கோடி தேவைப்படும். ஓய்வூதியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனைக் கருத்தில் கொண்டு, […]
செய்யாறு சிப்காட் அலகு 3 விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் செய்யாறு மேல்மா கூட்டுச் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம்
“பாமகவின் அடிப்படை கொள்கையே விவசாயிகள் பாதுகாப்பு தான்”

“சிப்காட் விரிவாக்க பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்” “விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை நிறுத்த வேண்டும்” “விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” “கைது செய்யப்பட்ட அருள் உட்பட அனைத்து விவசாயிகளையும் விடுவிக்க வேண்டும்” “விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்
முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன் என அன்புமணி ராமதாஸ் விளக்கம்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாக அன்புமணி தகவல் 10.5% இடஒதுக்கீடு பற்றி முதல்வர் ஸ்டாலினிடம் ஆலோசித்ததாக அன்புமணி தகவல் வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை சாதி பிரச்சினையாக பார்க்கக்கூடாது தமிழக அரசுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை கொண்டு வர மனமிருக்கிறதா என்று தெரியவில்லை நடப்பு கூட்டத்தொடரில் 10.5% இட ஒதுக்கீட்டை கொண்டு வர வலியுறுத்தினோம் – அன்புமணி ராமதாஸ் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பல போராட்டங்களை நடத்தியுள்ளோம் – அன்புமணி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி சந்திப்பு
தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் 3 வகையான ஆசிரியர் அமைப்புகள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 6 நாட்களாக போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் அமைப்புகளுடன் பேச்சு நடத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முன்வராதது கண்டிக்கத்தக்கது. சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை 14 ஆண்டுகளாகவும், பணி நிலைப்புக் கோரிக்கை 12 ஆண்டுகளாகவும், பழைய ஓய்வூதியக் கோரிக்கை 20 ஆண்டுகளாகவும் எழுப்பப்பட்டு […]
உணவில் தீண்டாமை போன்ற குற்றங்கள் குறித்து மக்களிடத்திலும், மாணவர்களிடத்திலும் விழிப்புணர்வு வேண்டும். அனைவரும் சமம் என்ற உணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை அடுத்த உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பட்டியலினப் பெண் சமைத்த உணவை உட்கொள்ள மாணவர்கள் மறுப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் வேதனையளிக்கின்றன. சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதியார் பிறந்த மண்ணில் உணவில் கூட தீண்டாமை கடைபிடிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகம் முழுமைக்கும் அண்மையில் விரிவாக்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தில் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது. அந்தப் பள்ளியில் […]