தென் சென்னை அமைச்சர் தொகுதி, வாக்குகளை வீணாக்காதீர்கள்: அன்புமணி!

பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தினை தென்சென்னை தொகுதி சோழிங்கநல்லூரில் ஆரம்பித்தார். மக்களிடையே அவர் பேசியதாவது, “என்னுடைய முதல் பிரச்சாரத்தை சகோதரி தமிழிசைக்காக தென் சென்னை தொகுதியில் தொடங்குவதை பெருமையாக கருதுகிறேன். அவர் பாரம்பரிய மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருடைய தந்தை குமரி அனந்தன் அவர்கள் மதுவிலக்கிற்காக இன்னும் போராளியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். மருத்துவமனையில் படுத்திருந்த போதும், அன்புமணி பேசுகிறேன் என்று சொன்னதும், அய்யா அந்த மதுவை ஒழியுங்கள் என்று சொன்னதும், […]
ஆடிட்டர் வீட்டில் பாமக மற்றும் பிஜேபி கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாம்
அன்புமணி மற்றும் அண்ணாமலை அவர்கள் முன்னிலையில் 9 நாடாளுமன்ற தொகுதிகளையும் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதியையும் ஒதுக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
மாங்கனி’க்காக ‘தோட்டத்தை’ வட்டமிடும் அதிமுக… அதிகாரத்துக்காக பாஜகவை துரத்தும் அன்புமணி!

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், கூட்டணி அமைத்துதான் தேர்தலைச் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பாஜகவுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தையை அன்புமணி ராமதாஸ் நடத்தி வருகிறார். அதேவேளையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமதாஸை சந்தித்திருக்கிறார். பாமகவின் திட்டம்தான் என்ன? பொதுக்குழு கூட்டத்திலேயே பாமக 12 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்தத் தொகுதிகளில் பூத் கமிட்டிகள் பாமக சார்பாக அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் சொல்லப்பட்டது. […]
அன்புமணி கைது தாம்பரத்தில் பாமக மறியல்

என்.எல்.சி நிர்வாகத்திற்கு எதிராக பாமகவினர் ஆர்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். அப்போது பேருந்துகள் போலீஸ் வாகனங்கள் அடித்து சேதமான நிலையில் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டர். இதனை கண்டிக்கும் விதமாக தாம்பரத்தில் பாமக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கருப்பசாமி தலைமையில் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் பேரூந்து உள்ளிட்ட வானகங்களை மறித்து சாலையில் படுத்த பாமகவினர் 50 க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் மார்கமாக போக்குவரத்து […]