மு.க.ஸ்டாலின்‌ நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக்கல்வித்‌ துறையின்‌ பேராசிரியர்‌ க.அன்பழகன்‌ கல்வி வளாகத்தில்‌, புதிதாக நிறுவப்பட்டுள்ள பேராசிரியர்‌ க.அன்பழகன்‌ திருவுருவச்‌ சிலையை திறந்து வைத்தார்

முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக்கல்வித்‌ துறையின்‌ பேராசிரியர்‌ க.அன்பழகன்‌ கல்வி வளாகத்தில்‌, புதிதாக நிறுவப்பட்டுள்ள பேராசிரியர்‌ க.அன்பழகன்‌ திருவுருவச்‌ சிலையை திறந்து வைத்து, அச்சிலை அருகில்‌ வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்‌ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்‌. இந்த நிகழ்ச்சியில்‌, நீர்வளத்துறை அமைச்சர்‌ துரைமுருகன்‌ உள்ளிட்ட அமைச்சர்‌ பெருமக்கள்‌, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்‌, பேராசிரியர்‌ அவர்களின்‌ குடும்பத்தினர்‌, உள்ளாட்சி அமைப்புகளின்‌ பிரதிநிதிகள்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.